பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஆரிய ஸம்பத்து 72

அவர் மேலும் கூறுகிறார் “இந்த ஆர்ய சம்பத்தை நாம் பல நூற்றாண்டுகளாக ஆதரித்துக் கொண்டு வந்தோம். சென்ற சில நூற்றாண்டுகளாக இதில் துருப்பிடிக்க இடம் கொடுத்து விட்டோம். தேவர்கள் நமக்குக் கொடுத்த கடமையைக் கர்வத்தாலும் சோம்பராலும், சிறுமையாலும், உல்லங்கனம் செய்யத் தொடங்கினோம். தேவர்கள், இந்த பாரத ஜாதியைக் கொஞ்சம் செல்லரிக்கக் கடவது என்று ஆசீர்வாதம் செய்தார்கள்” என்று பாரதி விசனப்பபட்டுக் குறிப்பிடுகிறார்.

நாம் நல்ல நிலைமையில் இருந்தோம். நமது நாடு நல்ல நிலைமையில் இருந்தது. இடைக்காலத்தில் சிலகுறைகளும் சேதங்களும் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோம். மீண்டும் நமது கடுமையான முயற்சியால் நமது நாடும் மக்களும் கூேடிமம் பெற வேண்டும் என்று பாரதி வேறு பல இடங்களிலும் குறிப்பிடுகிறார். அவர் நமது கவிதையில்,

“முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்

மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்

பின்னர் நாடுறு பெற்றியும்,”

என்று குறிப்பிடுகிறார்.

இன்னும் லோக குரு என்னும் கட்டுரையில் “சாஸ்திரம் பெரிது, சாஸ்திரம் வலியது. அஷ்ட மகாசித்திகளும் சாஸ்திரத்தினால் ஒருவேளை மனிதனுக்கு வசப்படலாம். பூர்வ காலத்தில் பல வகைக் கணித சாஸ்திரங்களும் இயற்கை நூல்களும், பாரத நாட்டிலேதான் பிறந்து பின்பு உலகத்தில் பரவியிருப்பதாகச் சரித்திர ஆராய்ச்சியிலே தெரிகிறது. இப்போது “சயின்ஸ்” பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக மேன்மை பெற்று வருகிறோம். காலக்கிரமத்தில் தலைமை பெறுவோம்” என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.