பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வறுமையின் காரணமும் விளைவும்-தீர்வும்-வழியும் 76

கொண்டனர். பலருக்கு ஆகாசமே உடைமை. வாயுவே ஆகாரம். இதற்கு மருந்து என்னவென்றால் எல்லோரும் சமானம். அண்ணன் தம்பி போல, என்ற புத்தி உண்டாகி, ஏழைகள் வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும்” என்று பாரதி கூறுகிறார்.

“அது முடியாவிட்டால் ஐரோப்பாவில் சோஷலிஸ்ட் கட்சியார் சொல்வதைப் போல நிலத்தைச் சகலருக்கும் பொதுவென்று ராஜ்ய விதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இங்கு ஒரு விஷயம் கருத்துப் பரிமாற்றத்திற்கு இடமளித்திருக்கிறது. பாரத நாட்டில் முற்காலத்தில் நிலத்திற்குப் பட்டா போட்டு தனிச் சொத்துடமையாக வேலி போட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. கோவில்களுக்கும், சில தர்மங்களுக்கும் பட்டயம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் தான், ஐரோப்பியர் பழக்கத்தில் நிலத்திற்கு பட்டா போட்டு ரயத்து வாரிமுறை கொண்டு வரப்பட்டு நிலம் என்பது ஒரு சொத்தாகி, விற்பனைப் பொருளாகி ஒரு சிலர் கையில் நில உடமைக்குவியல் வந்தது. ஜமீன்தார் முறையிலும் ஜமீன் பட்டாக்கள் போடப்பட்டன. ஆனால் இன்று நாடு முழுவதிலும் நிலவுடமை நிலப் பட்டா பழக்கத்திற்கு வந்து விட்டது. இன்றைய நிலையில் நாட்டில் உள்ள பெரும் பகுதி விளைநிலம். குறு, சிறு, நடுத்தர விவசாயிகளின் கையில் இருக்கிறது. புள்ளி விவரக் கணக்கின் படி சுமார் பதினைந்து சதவீத நிலம் வசதியான விவசாயிகளின் கையில் இருக்கலாம், பெரும்பாலான மாநிலங்களில் நில உச்ச வரம்புச் சட்டங்கள் வந்துள்ளன.

பசி, பட்டினி, வறுமை என்பது எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறது. அதைச் சமாளிப்பதற்கு பல நாடுகளிலும் பல முயற்சிகள் நடந்திருக்கின்றன.