பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Engắnds e cowbo-ideo enfuso leppte zgognu#=gpšġiżser-se #sferze: 77

பாரதத்தில் பண்டய காலத்தில் அநேகமாக, ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படும் வரையில், சாகுபடித் தொழில் மிகவும் சிறப்பாக சமுதாய முயற்சியில் ஒரு ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடைபெற்று வந்திருக்கிறது. பலவகை தான்யங்கள் மட்டுமல்லாது, பருத்தி, சணல், அவுரி, கரும்பு, எண்ணை வித்துக்கள், பயறு வகைகள் முதலிய பலவகைப் பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டு வந்திருக்கின்றன. பாரத நாட்டில் சாகுபடித் தொழிலில் நிலத்திற்கு அடுத்த படியாக நீர்ப்பாசன முறை முக்கிய இடம் பெறுகிறது. நீர்ப்பாசன முறைகள் பெரும்பாலும் சமுதாயப் பொறுப்பில் பராமரிக்கப் பட்டு வந்துள்ளன. சமுதாயக் காடுகளும் மேய்ச்சல் நிலங்களும் கூட சமுதாயப் பொறுப்பில் இருந்து வந்துள்ளன. கால் நடை வளம் மிகவும் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது.

சாகுபடி முடித்து தான்யங்கள் களத்தில் குவிக்கப் பட்டபோது அவை பங்கு பிரிக்கப் பட்டு வினியோகமாகியிருக்கிறது. முதல் பங்கு நிலத்தில் வேலை செய்தவர்களுக்கு, அடுத்தது ராஜபாகம், இந்த இராஜ பாகம் தான் அரசாங்கத்திற்கு வரி, இந்த ராஜபாகம், பெரும்பாலும் ஆறில் ஒரு பாகம், சில நல்ல செங்கோல் அரசர்கள் பத்தில் ஒரு பாகம் வாங்கியிருக்கிறார்கள். போர் காலங்களில் அரசுக்குச் செலவுகள் அதிகமாகும் போது மூன்றில் ஒரு பாகம் வசூலித்ததாகவும், மொகலாயர் ஆட்சி காலத்தில் இரண்டில் ஒரு பாகம் வசூலித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. இராஜ பாகத்திற்கு அடுத்து கோவில் பாகம், சமுதாய ஊழியர் பாகம், காவல் பாகம் இவ்வாறு பங்கு பிரிக்கப் பட்டு பின்னர், காக்கை குருவிகள் முதலிய பறவைகள், எலி, எறும்பு, முதலிய ஜந்துக்களுக்கும் போக மீதம் சாகுபடியாளர்கள் எடுத்துக் கொண்டனர். அத்துடன் உபரியாக உள்ள தானியங்கள், ஊர்ப் பொதுக் களஞ்சியங்கள், கோவில் களஞ்சியம், அரண்மனைக் களஞ்சியங்கள் ஆகியவற்றில் சேமிக்கப்பட்டு, பருவ மழை தவறி