பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. suplenumuisi :mw:IUpto súsosireuth Éiaith sulfului 7B

பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்ட காலங்களில் வினியோக செய்யப் பட்டிருக்கிறது.

அதுபோக அன்னதானங்கள், சத்திரம் சாவடிகளில் வழிப் போக்கர்களுக்கு, வறுமைப்பட்டவர்களுக்கு, வழிப் பயணம் செய்பவர்களுக்கு தேச யாத்திரை, கோயில் யாத்திரை செல்பவர்களுக்கும் அன்னதானம் செய்யப் பட்டிருக்கிறது. கோவில்களில் பக்தர்களுக்கும் வெளியூர் பக்தர்களுக்கும் சோறு போடப்பட்டிருக்கிறது. இப்போதும் கூட சில கோவில்களில் கோயிலுக்கு வரும் அனைவருக்கும் சாப்பாடு போடப்படுகிறது. அதுபோக கோவில் திருவிழாக்கள், குடும்பங்களில் நல்லது கெட்டது நடக்கும் விசேஷ காலங்களில் ஊர் ஜனங்கள் அனைவருக்கும் அல்லது உறவினர்கள் மற்றும் உறவின் முறையினர் அனைவருக்கும் சாப்பாடு போடுவது என்பது, விருந்தளிப்பது என்பது இந்த நாட்டின் கலாச்சாரமாகும். காக்காய்க்குச் சோறு வைத்து விட்டு சாப்பிடுவது என்பது இந்த நாட்டின் பழக்கமாகும்.

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான அன்னதானக் கலாச்சாரம் கிடையாது. அங்கு நிலப் பிரபுத்வ மன்னராட்சி காலத்தில் நிலமெல்ல்ாம் அரச குடும்பத்தினருக்கும், பிரபுக்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், மடாலயங்களுக்கும் சொந்தமாக இருந்தது. அரச குடும்பத்தினர், பிரபுக்கள், தேவாலய மடாலய அதிபர்கள் கைகளில் அனைத்து அதிகாரங்களும் கல்வி நிறுவனங்களும் ஆட்சி நிறுவனங்களும் இருந்தன. இவையெல்லாம் சேர்ந்து மிகப் பெரும்பாலும் எதேச்சதிகாரக் கொடுங்கோன்மை மிக்க கூட்டாட்சிகளாகவே இருந்தன. அப்போது வறுமையால் பசி பட்டினியால் மக்கள் மாண்ட போது கேள்வி கேட்பாரில்லை.

பின்னர், இத்தகைய நிலப்பிரபுத்வக் கொடுங்கோன்மைக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடந்த போது நிலமெல்லாம் சகலருக்கும்