பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTSLL L TT L TCCLy CTCLL LLLLLLMTTeLeSK LLLLLS 79

பொதுவென்று ராஜ்ய விதி ஏற்பாடு செய்ய வேண்டுமென்று குரல் எழுந்தது. உழுபவனுக்கே நிலம் என்னும் கோரிக்கையும் அங்கிருந்து எழுந்ததுதான். அது அந்த நாடுகளின் சோஷலிஸ்டு கட்சியாரின் குரலாக இருந்தது.

ஐரோப்பிய நாடுகளில் நிலப் பிரபுத்வ முறையும் ஆட்சியும் ஒழிக்கப் பட்ட போது நிலப்புரபுக்கள் கையிலிருந்த நிலமெல்லாம் கை மாறி நிதி மிகுந்தவர்களின் தனிச் சொத்துடமையாக விற்பனைப் பொருளாக மாறி விட்டது. சாகுபடி செய்பவர்களின் கைக்கு வரவில்லை. பெரிய முதலாளித்வப் பண்ணைகளாக மாறி விட்டன. சாகுபடி செய்பவர்களின் கைக்கு நிலம் வரவில்லை. அவர்கள் எல்லாம் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக ஆகி விட்டார்கள். எந்த ஐரோப்பிய நாட்டிலும் நிலம் அனைவருக்கும். பொதுவானதாக சமுதாயச் சொத்தாக ஆக்கப்படவில்லை.

ரஷ்யாவில் 1917-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சோஷலிஸ்ட் புரட்சி என்னும் பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலத்திலும் நிலப் பிரப்புக்களின் கையிலிருந்த நிலமெல்லாம் அரசுக்குச் சொந்தமாக்கப் பட்டு அந்த நிலமெல்லாம் சாகுபடியாளர்களுக்கு வினியோகம் செய்யப் பட்டு பின்னர் அவைகள் கூட்டுப் பண்ணைகளாக சேர்க்கப் பட்டன. அவ்வாறு கூட்டுப் பண்ணைகளாக மாற்றப் பட்டபோது, அக்கூட்டுப் பண்ணைகளுக்குத் தங்கள் நிலத்தைக் கொடுக்க மறுத்த விவசாயிகள் (நிலவுடைமையாளர்கள்) குலாக்குகள் என்னும் பெயரில் பலர் படுகொலை செய்யப் பட்ட வரலாறு உண்டு. பின்னர், அண்மைக் காலத்தில் ரஷ்யாவில் செயல் பாட்டில் இருந்த சோஷலிஸ்டு அமைப்பு நடைமுறையில் நீடிக்க முடியாமல் சிதைந்து விட்டது என்பதை அனைவரும் அறிவர்.