பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வறுமையின் காரணமும் விளைவும் தீர்வும் வழியும் B0

இந்திய நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஐரோப்பிய முறையிலான நிலவுடமை முறை செயல் படுத்தப் பட்டு, ரயத்துவாரி முறை, ஜமீன்தார் முறை என்று உருவாக்கப் பட்டது. அதன் படி நிலவுடமைப் பட்டாப் போடப் பட்டு, விற்று வாங்கப் படும் பண்டமாக்கப் பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் நிலச் சீர்திருத்தம் என்னும் பெயரில் ஜமீன்தார் முறை ஒழிக்கப் பட்டு நிலம் தனிவுடமையாக்கப் பட்டது. நாடு முழுவதிலும் ரயத்து வாளி முறை கொண்டு வரப்பட்டது. இதில் நிலக் குவியல் தடுக்கப் பட வேண்டும் என்று நில உச்ச வரம்புச் சட்டங்கள் பல மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டு மிச்ச நிலம் வினியோகம் செய்யப் பட்டது. ஆனாலும் துண்டு துக்காணியான நிலத்தைப் பல குறுநில, சிறுநில நிலவுடமையாளர்கள் தாங்கள் சொந்த சாகுபடி செய்ய முடியாமலும், சாகுபடித் தொழில் கட்டுபடியாகாமலும் தங்கள் நிலங்களை மற்றவர்களுக்கு விற்பனை செய்து விட்டுத் தாங்கள் கூலி விவசாயிகளாக மாறியுள்ளனர். அல்லது வேறு தொழில்களுக்கு மாறியுள்ளனர், அல்லது குடி பெயர்ந்துள்ளனர்.

இத்தகைய விவரங்கள் பாரதியார் காலத்தில் முழுமையாகக் கிடைத்திருக்கவில்லை. அவர் காலத்தில் இருந்த நிலைமைகளில் பாரதியார் இந்தப் பிரச்னைகள் பற்றி மனிதாபிமான முறையிலேயே தனது கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளார். மறுபக்கம் ஜமீன்தார்களின் ஆடம்பரங்களையும் வீண் செலவுகளையும் விமர்சனம் செய்துள்ளார்.

பாரதி ஜன வகுப்பு என்னும் கட்டுரையில் மேலும் கூறுகிறார்.

“மனிதர் அனைவருக்கும் போதுமான ஆகாரம் பூமிதேவி கொடுக்கும். பூமிதேவியின் பயனை நேரே, கையாளத் தெரியாமல்

பொறாமையாலும் அறியாமையாலும், தாறுமாறாக விழல் படுத்தி, சேறு தேடுமிடத்தில் சோறு தேடாமல் பலர் ஒருவர்கொருவர் கொல்ல