பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. sumismouolsir anusorupib sólsosnsub 3iisui. வழியும் B2

எனவே இன்றைய நிலைமையில் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில் தொடர்ச்சியாக உணவு உற்பத்தி பெருகும் வகையில் சாகுபடித் தொழில் வளர்ச்சியடையவும் மேம் படவும் ஒரு சரியான சாகுபடிக் கொள்கையும் அரசின்பால் உருவாக்கப் பட்டு, நிலம் நீர்ப்பாசனம், நல்ல விவசாயக் கருவிகள், நல்ல விதை, இயற்கை உரம், கால் நடைகளும், பண்ணைகளும், பயிர் பாதுகாப்பு, விவசாயத் துறையின் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் மேம் படுத்தல், உணவுப் பொருளைப் பாதுகாத்தல், சேமித்தல், சீராகக் கொள்முதல் செய்தல், முறைப் படுத்தப் பட்ட சீரான வினியோகம், ஆகியவற்றில் அக்கொள்கைகளை சரியாகச் செயல் படுத்த வேண்டும். அதுவே பாரதியின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வழியாகும்.

இன்னும் வறுமையின் கொடுமைகள், அதன் விளைவுகள், ஆகியவற்றையும், அதற்கான தீர்வுகளைப் பற்றியும் பாரதி தனது கட்டுரையில் எடுத்துக் கூறுகிறார், கேளுங்கள். அதற்கு அன்பே வழியாகும்.

“ஏழையின் அழுக்குத் துணியையும் அழுக்குடம்பையும் சிரைக்காத முகத்தையும் பார்த்து பொருளாளியின் குழந்தைகள் மேற்படி ஏழை தனது மனுஷ்ய பதவிக்குத் தாழ்ந்த பன்றி, நாய், மாடு வகுப்பைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறார்கள். ஐரோப்பாவில் ஏழைக்கும் பொருளாளிக்கும் விரோதம் முற்றிப்போய் உள்நாட்டுச் சண்டைகள் நேரிட்டும், அப்படி நேரிடாதபடி தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஜனங்களை ஒன்று சேர்க்கும் பொருட்டாக வெளி நாடுகளின் மீது சில ராஜாக்கள் போர் தொடங்கக் கண்டங்களில் போர் பரவியும், பூமண்டலம் தூள் தூளாகிறது. கிழக்கு தேசங்களிலும் யுத்தமில்லாமல் சமாதானத்துடன் இருக்குமிடங்களிலும், திருஷ்டாந்தமாக நமது தமிழ் நாட்டுப் பறையர் கூட . கண்