பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அன்பு வழி B4

10.அன்பு வழி:

இங்கு பாரதியார், மேன்ல நாடுகளிலும், கீழை நாடுகளிலும் உள்ள ஒரு உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார். “ஐரோப்பாவில் ஏழைக்கும் பொருளாளிக்கும் விரோதம் முற்றிப் போய் உள் நாட்டுச் சண்டைகள் நேரிடுகின்றன” என்று கூறுகிறார்.

பிரிட்டனில் சார்ட்டிஸ்ட் இயக்கம் என்னும் பெயரில் பெரும் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் பாராளுமன்ற முற்றுகைகளும் நடை பெற்றன. ஆவேசம் கொண்ட பல்லாயிரக்கணக்கான எழை மக்கள், தங்கள் கோரிக்கைகளைப் பட்டியலாகத் தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துக் கிளர்ச்சிகள் நடத்தினர். பிரான்ஸில் பாரிஸ் கம்யூன் என்னும் பெயரில் 1871-ம் ஆண்டில் பெரும் ஆயுதம் தாங்கிய கலவரம் நடைபெற்றது. அப்போது பாரிஸ் நகரத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு பாரிஸ் நகரத்தைக் கைப்பற்றித் தொழிலாளர் ஆட்சியை அமைத்தார்கள். இதனால் அந்நாட்டில் பெரும் குழப்பமும் உள்நாட்டுக் கலவரமும் ஏற்பட்டுப் பல்லாயிரக் கணக்கானவர்கள் பலியானார்கள். எஞ்சியவர்கள் பலரும் பல நாடுகளுக்கும் தப்பி ஒடி அவதிப் பட்டார்கள். ஜெர்மனியில் நிலப் பிரபுக்களுக்கெதிரான பெரிய கலவரங்கள் ஏற்பட்டன. இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் நிலப் பிரபுக்களுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் பெரும் ஆயுதம் தாங்கிய உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டுப் பல ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். மள்னர்களும் நிலப்பிரபுக்களில் பலரும் கொல்லப் பட்டார்கள்.

இந்தப் போராட்டங்களைப் பற்றியெல்லாம் ஐரோப்பிய அறிஞர்கள், எழுத்தாளர்கள் எல்லாம் வர்க்கங்கள் என்றும், வர்க்க முரண்பாடுகள் என்றும் வர்க்கப் போராட்டங்கள் என்றும் விவரித்து