பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை 4

நமது கல்வி முதலியவற்றில் ஏற்படுத்திய சேதம் ஆகியவை கொஞ்சநஞ்சமல்ல. அதன் விளைவாக ஏற்பட்ட பஞ்சம் வறுமை, பசி, பட்டினி, நோய், கல்லாமை, அதனால் ஏற்பட்ட பெரும் பட்டினிச் சாவுகள், மனிதச் சேதங்கள், கால் நடைச் சேதங்கள் கணக்கில் அடங்காது. இந்தச் சூழ்நிலையில், வங்கம், தமிழ்நாடு, பாஞ்சாலம், மகாராஷ்டிரம் முதலிய பாரத நாட்டின் பல பகுதிகளிலும் பல மகான்கள் தோன்றி இந்த நாட்டில் ஒரு புதிய விழிப்புணர்ச்சி ஏற்படுவதற்குக் காரணமாயினர்.

தமிழ் நாட்டில் இராமலிங்க சுவாமிகள் தோன்றி ஒரு புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். விவேகானந்தர் தொடங்கிய புதிய சிந்தனைப் புரட்சியை தமிழகம் முதலில் அடையாளம் கண்டு, அவருக்கு ஆதரவளித்தது. அதைத் தொடர்ந்து பாரதியார் தனது உணர்ச்சிமிக்க, உண்மைமிக்க, கருத்தாழம் மிக்க கவிதைகளையும், கட்டுரைகளையும் நாட்டுமக்களுக்கு முன்பாக எடுத்து வைத்தார். அவை மிகவும் சக்தி வாய்ந்த பேராயுதங்களாகச் செயல்பட்டு மக்களுடைய உள்ளங்களில் சுதந்திர உணர்வையும் தன் மானத்தையும் கிளப்பியது. நாடு முழுவதிலும் எழுச்சி பெற்ற சுதந்திர வேள்வியில் பல மகான்கள் தோன்றி மக்களைத் தட்டி

எழுப்பினார்கள்.

பாரதியார் ஒரு தேசிய கவியாக மக்களிடம் உலவினார். ஒரு மகாகவியாக மக்களிடம் அங்கீகாரம் பெற்றார். பத்திரிகைகளில் அவர் எழுதி வெளியிடப் பட்ட பல கவிதைகளும் அத்துடன் அவர் எழுதி வெளியிடப்பட்ட பல கட்டுரைகளும் விடுதலைப் போராட்ட வீரர்களின் உள்ள்ங்களில் பதிந்து அவர்களைத் தட்டி எழுப்பியது. அந்த மகாகவி நடுவயது ஆகுமுன்பே நம்மைவிட்டு இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவர் மறைந்த முப்பது ஆண்டுகளுக்குள் இந்திய