பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.-அன்பு-வழி B 5

தேசங்களில் சமாதான எல்லைகளிலே கூடி ஏழைகள் கண் திறந்து பொருளாளிகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.

இதற்கெல்லாம் அன்புதான் தீர்ப்பு. எல்லா மனிதருக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தைக்கும், வெள்ளைக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும் கரு நிறத்து நீக்ரோவருக்கும் - சகலருக்கும் உள்ளே பரமாத்மா, பரம புருஷனாகிய நாராயணனே அந்தர்யாமியாக நின்று வெளித் தொழில்களை நிகழ்த்துகிறான். ஆதலால் மானிடரே, சகோதர உணர்ச்சியே தீர்ப்பு (தீர்வுக்கான வழி) சகோதர உணர்ச்சியைப் பற்றிக் கவிதைகள் பாடுவதும் நீதி நூல்கள் புகழ்வதும், வர்த்தமானப் பத்திரிகைகள் கர்ஜனை செய்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. நடையில் (நடை முறையில்) எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அது நடை (முறைக்கு) வர வேண்டும். கண்ணில்லாதவன் வான சாஸ்திரம் படிக்க முடியாது. ஆதலால் அன்பில்லாவிடில் இன்பமில்லை. இன்பத்தைத் தேடித்தேடி எங்கும் எப்பொழுதும் எதனினும் காணாமல் வருந்துகின்ற மானிடரே,

கேளுங்கள்.

அன்புண்டானால் இன்பமுண்டு, என்பதை புத்த பகவான் கண்டு பிடித்துச் சொன்னார். அந்த யுக்தியின் மகிமையை நேரே மனிதர் தெரிந்து கொள்ளாமல் அவர் காட்டிய பயனை அடையாமலே இருந்து வருகிறார்கள். அன்பு கொள்கையில் இருந்தால் போதாது. செய்கையில் இருக்க வேண்டும் என்று பாரதி பேசுகிறார். செய்கையில் இருப்பதற்கு 'பறையருக்கு போஜனம் செய்வித்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட்டால் நீ மனுஷ்யனிடம் அன்புடையவனாக விளங்குவாய்” என்று பாரதியார் முடிவு கூறுகிறார்.

பாரதி வறுமையாலும் சாதிக் கொடுமைகளாலும் பாதிக்கப்