பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTLL LLLL LLLL LLLLL LMMML LLLLLTCLLLLSL LLLLS 00

ஜனாதிபதியாக்கி மகிழ்ந்தோம். மிகப் பெரிய ஜனநாயகம் பேசும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு நீக்ரோ மகன் இதுவரை ஜனாதிபதியாக வந்ததில்லை. அடித்தட்டில் உள்ள மக்களைக் கை து.ாக்கி விடுவதற்கு இட ஒதுக்கீடுகள் செய்து அவர்களை முன்னேற்றுவதற்கு அரசியல் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளோம். இன்று நமது நாட்டின் அரசியல் சட்டப்படி அனைவரும் சமம் என்பது அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. சாதிப் பாகுபாடுகளும் வேறுபாடுகளும் காட்டுவது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு அரசியல் பூர்வமாகவும், சமுதாய பூர்வமாகவும் அதே சமயத்தில் அன்பு வழியிலும் மக்களுக்கிடையில் காட்டப்படும் வேறு பாடுகளைக் களைவதற்கு அனைத்து முயற்சிகளையும் நமது நாட்டின் அறிவார்ந்த மக்கள் எடுத்து வருகிறார்கள். பாரதி வழியில் இந்த அரசியல் மற்றும் சமுதாயக் கடமைகளை நாம் நிறைவேற்றி வருகிறோம்.

ஐரோப்பிய நாடுகளில், வட அமெரிக்காவில், உள்ள இன வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும், வர்க்க வேறுபாடுகளையும், பாகுபாடுகளையும் களைவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதற்கான முயற்சிகளும் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே நமது தர்மத்தை ஐரோப்பாவிலும் இதர நாடுகளிலும் பரப்ப வேண்டும்.

இன்னும், இந்நாள் வரை பாதிக்கப்பட்ட மக்களை, புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தங்கள் சொந்தத் திறமைகளையும், ஆற்றல்களையும் தங்கள் சொந்த முயற்சிகள் மூலமும் வளர்த்துக் கொள்வதற்கு ஊக்க மூட்ட வேண்டும்.

3. XX *x