பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. Lns flg. மேம்பாடு 90

11.மனித மேம்பாடு:

தனி மனித மேம் பாட்டிற்கும், மனித வள மேம்பாட்டிற்கும் அதன் மூலம் சமுதாய மேம்பாட்டிற்கும் உலக மேம்பாட்டிற்கும் நமது முன்னோர்கள் வெகுவாக சிந்தித்திருக்கிறார்கள். அவர்களுடைய சிந்தனையில் உருவான அறம் பொருள் இன்பம் வீடு என்னும் புருஷார்த்தங்கள் பற்றி உலகில் யாரும் இத்தனை தெளிவாக சிந்தித்திருக்க வில்லை.

மிருக சாம்ராஜ்யத்திலிருந்து வெளியேறி மனிதன் ஒரு மானுட சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறான். ஆயினும் மனிதனிடத்தில் சில மிருக குணங்களும் தொடர்ந்து நீடிக்கின்றன. சில தனி மனிதர்களைப் பற்றிக் கூறும் போது, அல்லது குறை கூறும் போது சில மிருக குணங்களைச் சுட்டிக் காட்டி திட்டுவதுண்டு. நாய் பேய் என்றும் நரி, ஓநாய் என்றும் கூறுவதுமுண்டு. சிங்கம், புலி என்று புகழ்வதும் உண்டு.

பாரதி யாரும் சில மனிதர்களின் குணங்களைக் குறித்து நரி, தேவாங்கு, பாம்பு, பன்றி, நாய், வேட்டைநாய், வெளவால், கிளிப் பிள்ளை, கழுதை, வான்கோழி, தூண், கழுகு, ஆந்தை, என்று பல உயிரினங்களையும் உதாரணம் காட்டி, மனிதனுடைய அத்தகைய மிருக குணங்களைப் போக்கி முழு மனிதனாக மனிதனை உருவாக்க வேண்டிய அவசியத்தை பாரதி வலியுறுத்திக் கூறுகிறார்.

மனிதனிடமுள்ள மனிதத் தன்மைகளை, மனிதச் சிறப்புகளை, பல கோணங்களிலும், பல பரிமாணங்களிலும் உயர்த்த வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்பது பாரதியின் அவாவும் முயற்சியுமாகும்.

“ஒவ்வொரு நிமிஷமும் சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதன் என்றும்