பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.-மனித-மேம்பாடு 92

கொடுக்கிறார்கள். எல்லா மாணவ மாணவியருக்கும் ஒரே மாதிரியான பாடப் புத்தகங்கள் தான் இருக்கின்றன. இருப்பினும் படிப்பறிவிலும், கிரகிப்பதிலும், புரிந்து கொள்வதிலும், மதிப்பெண்கள் எடுப்பதிலும், ஏற்ற தாழ்வுகள் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதற்கான காரணம் என்ன? இதுவும் ஒரு புதிரான கேள்விதான்.

வீடுகளிலும், பள்ளிகளிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் செலுத்தி அதன் அறிவு வளத்தைப் பெருக்குவதற்கு தனி முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும் என்னும் ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இங்கு ஒவ்வொரு தனி நபரும் குழந்தை, மாணவ, மாணவியர், மனிதர் ஆகியோரின் தனி முயற்சி, சுயமுயற்சி, வீட்டுப் பாடம், சுய படிப்பு ஆகியவை மனிதப் பயிற்சியில் மனித மேம் பாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. எனவே ஒவ்வொரு நபரின் தனி முயற்சிகளை, சுய முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். இதில் கவனம் அதிகமாக செலுத்த வேண்டும்.

இத்தகைய சுய முயற்சிக்கு வயது வரம்பு இல்லை. இங்கு ஏற்படும் மனித முயற்சிதான் ஒருவரை மிருக நிலையிலிருந்து உயர்த்துவதற்கு பெரிதும் உதவுகிறது. குடும்பப் பராமரிப்பும் பள்ளிக் கல்வியும் மனித வளர்ச்சிக்கு அடிப்படையை அமைக்கிறது. சுய முயற்சி மனிதனை உயர்த்துகிறது.

ஒவ்வொரு நிமிஷமும் சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதன் என்றும், தேவன் என்றும் சொல்வதற்கு உரியவனாவான்” என்று பாரதி

கூறுகிறார்.

இதில் சத்தியம், தர்மம், பரமார்த்தம் என்னும் அருமையான சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. சத்தியத்தைப் பேச வேண்டும்.