பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. udsefs Stald-"G. 94

முன்னேற்றமும் என்பது பன்முகப் பட்டது.

நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு ஒன்றிணைந்த பல பணிகளை நாம் மேற் கொள்ள வேண்டியதிருக்கிறது.

ஏற்கனவே ஆயிரம் ஆண்டு காலமாக நாட்டில் ஏற்பட்ட சேதங்கள், அழிவுகள், நாசங்கள், கொள்ளை முதலியவற்றால் ஏற்பட்ட படுகாயங்களை ஆற்ற வேண்டும், சேதங்களைப் பழுது பார்க்க வேண்டும். பல புனரமைப்புப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்ற போது ஏற்பட்ட பிரிவினை, அதனால் ஏற்பட்ட சேதங்கள், படுகாயங்கள் அவைகளை பழுது பார்த்து சீரமைக்க வேண்டும், புனரமைக்க வேண்டும்.

அத்துடன் சேர்த்து வளர்ச்சிப் பணிகளை, முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் தற்காப்பைப் பலப்படுத்த வேண்டும். ஆயுத பலம் போதுமான அளவில் இருக்க வேண்டும். நமது நாட்டின் விவசாயத்திற்கு அடிப்படையானது நீர்ப்பாசனம். பழைய நிர்ப்பாசன நிலைகளை சீரமைக்க வேண்டும். புதிய நீர்ப்பாசன முறைகளுக்குத் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும். கால் நடைகளைப் பெருக்க வேண்டும். காடுகளை வளர்க்க வேண்டும். முதல் நிலை உற்பத்தியைப் பெருக்க வேண்டும். கட்டமைப்புகளை பலப் படுத்த வேண்டும், போக்குவரத்துத்துறை சாலை, ரயில், கப்பல், விமானம், குழாய்) மின்சார உற்பத்தி வினியோகம், தபால், தந்தி, தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றில் சுய சார்பு நிலை ஏற்பட வேண்டும். சிறு தொழில் நடுத்தரத் தொழில், கனரகத் தொழில் பொருள் உற்பத்தித் தொழில் ஆகியவற்றை வளர்க்க வேண்டும். மக்களின் வளர்ந்து கொண்டிருக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்யும்