பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசீயம் -அ. சீனிவாசன் அது வெவ்வேறு மரக்குச்சிகளை, விறகுக் கட்டைகளை ஒன்று சேர்த்துக் கட்டுவதைப் போன்றதல்ல. பாரதி தனது பாடல்களில் மிக அருமையாகக் கூறுகிறார். பாரதத்தாய் முப்பது கோடி (கோடி கோடி - இப்போது நூறு கோடி) முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள், இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள், என்றும் நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள் தாய், அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப் பின் ஆனந்தக் கூத்திடுவாள் என்றும் எங்கள் தாய் என்னும் தலைப்பில் பாரதி பாடல் அமைந்திருப்பதைக் காணலாம். பாரதக் கலாச்சாரத்தையும் மரபுகளையும் வரலாற்றுப் பாரம்பரிய இணைப்பையும் தொடர்ச்சியையும் இந்து தர்மம் என்று குறிப்பிடுகிறோம். இது இஷ்ட பூர்வமான இணைப்பாகும். இது பலவகை வழிபாடுகளையும் பழக்கவழக்கங்களையும் நடை உடைபாவனைகளையும் கொண்ட சங்கமமாகும். இதில் கட்டாய மத மாற்றங்களுக்கும் நவீன மதக்கட்டுப்பாடுகளுக்கும் பதிவுகளுக்கும் ஆணைகளுக்கும், தேவ அனுமதிகளுக்கும் இடமில்லை. இந்த தர்மம், அறிவு புலனறிவு, ஆறறிவு, ஆய்வறிவு, அனுபவ அறிவு, ஆன்மீக அறிவு, ஆத்ம ஞான அறிவு ஆகியவை கொண்டதாகும். இந்த நூற்றாண்டில் உங்கள் அனைவரையும் என்னுடைய மதத்தில் பதிவு செய்வேன். அதற்கு எவ்வளவு பணம் செலவானாலும் சரி, எத்தனை தியாகம் செய்ய வேண்டியதாயினும் சரி என்று யாராவது கூறினால் அது வன்முறைச் சொல்லாகும். அது ஆக்கிரமிப்பானதாகும். அது அக்கிரமமானதாகும். அது கொடுமையானதாகும். அது அரக்கத்தனமானதாகும். அந்த முயற்சிகள் வீணானதாகும். அந்த முயற்சிகளை அந்த வன்முறைகளை பாரதம் தனது ஆன்மீக பலம் கொண்டு தகர்த்தெரிந்து விடும். அந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளை அந்த அநாகரிகமான வன்முறைகளை நமது கோதண்டமும், காண்டீபமும், சக்கராயுதமும், திரிசூலமும், வேலாயுதமும் கதைகளும் துTள் து.ாளாக்கிவிடும்.