பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுகா ய் 7 | _ ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாரத சமுதாயத்திற்கெதிராக அதன் பாரம்பரியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிராக அதன் அனைத்துத் துறைகளுக்கும் எதிராகப் பல ஆக்கிரமிப்புகளும் வன்முறைக் கொடுமைகளும் நிகழ்ந்துள்ளன. அதனால் பல தீங்குகளும், சேதங்களும் படுகாயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தத் தீங்குகளையும் சேதங்களையும், படுகாயங்களையும், புண்களையும் போக்கி ஆற்றுவதும் பாரத நாட்டைப் புதுப் பொலிவுடன் மேம்படுத்திக் கொண்டு வருவதும் பாரத தேசியத்தின் முன்புள்ள முக்கியமான பணியாகும். ஆங்கிலக் கல்வி நமது பண்பாட்டைப்பெரும் அளவில் சேதப் படுத்தியிருக்கிறது. அந்த ஆங்கிலக் கல்வியைப் பற்றியும், அக்கல்வி நமது நாட்டில் விளைவித்துள்ள சேதங்களைப் பற்றியும் செய்துள்ள தீமைகளைப் பற்றியும் பாரதியார் குறிப்பிடும் போது, “செலவு தந்தைக் கோராயிரம் சென்றது தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன நலம் ஒர் எட்டுணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்,” என்று கூறி, "இந்தப் பேரிருளில் விழுந்து அழிந்திடாது ஒருவாறு பிழைத்தேன்” என்றும் கூறி முடிக்கிறார். இலங்கையில் அரக்கர் கோன் மகன், தமது கொடுங்கணைகளால் மாயப் போர் நடத்தி, யாரும் அறியாத நேரத்தில் மறைமுகமாக நின்று நான்முகன் படையை ஏவி விட இலக்குவனும் வானரப்படைகளும் காயமுற்று போர்க்களத்தில் சாய்ந்து விழுந்த போது, அனுபவம் மிக்க வீடணனும், ஆற்றல் மிக்க அனுமனும், அறிவின் மிக்க ஜாம்பவனும் கலந்து பேசி உயிர் காக்கும் மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலைக்குச் சென்று மருத்துவ இலைகளைக் கொண்டு வரத் தீர்மானித்தனர்.