பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- + rதோற்றுவாய் ئا சமுதாயத்தில், தேசபக்தி என்னும் நவீன மார்க்கம் தோன்றி நாட்டில் ஒரு புதிய ஆதர்சம், ஓர் கிளர்ச்சி ஓர் தர்மம் தோன்றி வளர்ந்தது. அதுவே பாரதியின் தேசியமாகும். அந்த தேசீயம் தோன்றி வளர்ந்த போது, பாாத மக்களிடம் ஒரு புதிய உத்வேகம் ஏற்பட்டது. பண்டைய பாரதத்தின் பல சிறப்புகளும், உயிர்த்துடிப்புடன் புத்துயிர் பெற்று எழத் தொடங்கியது. பாரதத்தின் அறிவித்துறை வேகமாக மேம்படத் தொடங்கியது. பழைய காயங்கள். புண்கள், தழும்புகள் மறையத் தொடங்கின. அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையின் பல சிதரல்கள் பாரதம் முழுவதிலும் சிதரி அவை நமது ஆரோக்கியத்திற்குத் தெம்பூட்டிக் கொண்டிருக்கிறது. அனுமனும் சஞ்சீவி மலையும் பாரத நாட்டின் ஆன்மாக்கள் அனுமன் பாரத மக்களின் மகாவடிவம். அனுமனைப் போன்ற ஒரு பெரு வடிவத்தையும், சஞ்சீவி மலையைப் போன்ற ஒரு அருங்காட்சியையும் உலகின் வேறு எந்த இலக்கியத்திலும் காண முடியாது. அவை பாரதத்தின் சிறப்புகளாகும். அவை பாரதத்திற்கே உரியதாகும். பாரதத்திற்கே உரிய தேசீய அடையாளமாகும். பாரதியின் கவிதைகளில், பாரதியின் தேசீய சிந்தனைகளில் இந்தப் புதிய ஆதர்ஸங்களும் தேசீயமும் வெளிப்படுகின்றன. அவைகளை இந்த நூலில் எடுத்துக் காட்ட முயற்சிக்கப் பட்டிருக்கின்றன. பாரதி தனக்குத் தனது குருமணி, பாரத தேசத்தின் பேருருவைப் பெருவடிவத்தைக் காட்டியதை, ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டி ஆத்ம நிலையை விளக்கிக் காட்டியதை ஒப்பிட்டு எடுத்துக் கூறுகிறார். யூரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்த ரீமத் பகவத் கீதை உலகிலேயே மிக உயர்ந்த முதல் நிலையிலான பேரிலக்கியமாகும். தெய்வீகப் பேருரையாகும். ஆன்மீகமும், தத்துவ ஞானமும், அரசியல் தத்துவமும், சமூகவியல் தத்துவமும் நிறைந்த ஒரு புனிதமான பேரிலக்கியமாகும். ரீமத் பகவத் கீதைக்கு பாரத நாட்டில் ஏராளமான பாஷ்யங்களும், விளக்கங்களும் விரிவுரைகளும் கூறப்பட்டிருக்கின்றன. நாள்தோறும் அவை மக்களிடம் கூறப்பட்டு பிரபலப்பட்டு வருகின்றன.