பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசீயம் -அ. afotifosi oroit so அந்தப் புனிதப் பேரிலக்கியத்தின் மணி முடியாக ரீகிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வ ருப தரிசனம் (உலகப்பெருவடிவம்) அமைந்துள்ளது. பகவத் கீதையின் 11-வது அத்தியாயம் விஸ்வரூப் (உலகப் பெருவடிவ தரிசனமாகும். இந்த அத்தியாயம் முழுமையாக இந்த நூலில் எடுத்துக் காட்டாகக் கூறப் பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் ரீகிருஷ்ணனின் வடிவம் என்பதும், ழரீகிருஷ்ணனே உலகப்பெருவடிவம் என்பதும் நமது கடவுட் கொள்கையாகும். காயிலே புளிப்பதும், கனியிலே இனிப்பதும் கண்ண பெருமானே என்பது பாரதி வாக்கு. உலகம் முழுவதும், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் உயிர்த் தொடர்புடன் கூடிய இணைப்பு கொண்டதாகும் என்பது நமது தத்துவ நிலையாகும். நம்மாழ்வர் பெருமான், "புகழு நல் ஒருவன் என்கோ பொருவில் சீர் பூமி யென்கோ திகழும் தண் பரவை யென்கோ தீயென் கோ! வாயு வென்கோ! நிகழும் ஆகாச மென்கோ நீள்சுடர் இரண்டு மென்கோ இகழ்விலிவ் வனைத்தும் என்கோ கண்ணனைக் கூவு மாறே!” என்று பாடுகிறார். இன்னும் குன்றங்கள் (மலைகள்) மாரி (மழை) தாரகைகள் (நட்சத்திரங்கள்) நாவியல் கலைகள், ஞான நல்லாவி, சாதி மாணிக்கம், சவிகொள் பொன் முத்தம், சாதி நல்வயிரம், ஆதியஞ்சோதி, ஆதியம்புருடன், அடியவர் வினை கெடுக்கும் நச்சு மாமருந்தம், நலங்கடல் அமுதம், அச்சுவைச்கட்டி, அறுசுவை அடிசில், நெய்ச்சுவைத்தோல், கனி, பால், நான்கு வேதப் பயன், சமய நீதி நூல், நுடங்கு கேள்வி, இசை, வினையின் மிக்க பயன்,