பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் பாகிஸ்தான் பிரிந்து பங்களாதேஷ் உருவாயிற்று. அதன் காரணமாக முஸ்லிம் தேசீயம் என்பது உடைந்து போய் விட்டது. 1940-ம் ஆண்டுகளில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் திராவிட தேசீயம் என்னும் கருத்தும் கிளர்ச்சியும் தோன்றியது. அவர்களும் பிரிவினை பேசினார்கள். தென்மாநிலங்களை இணைப்பதான திராவிட தேசீயம் வெற்றி பெறவில்லை. அது கூனிக் குறுகி தமிழ் தேசீயம் என்றாயிற்று. அதன் பிரிவினை வாதம் வெற்றி பெறவில்லை. தமிழ் மக்கள் அப்பிரிவினைக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே திராவிட தேசீயம் என்னும் கருத்து வடிவம் நீர்த்துப் போய் விட்டது. ஆயினும் அவை சிலருடைய சிந்தனையில் உரைந்து போய் அவ்வப் போது கருத்தளவில் வெளிப்படுகிறது. இதைத் தவிர பாரதத்தின் வேறு சில பகுதிகளில் மொழிவழி தேசீயம் அவ்வப்போது வெளிப் படுகின்றன. ஆனால் அவைகளுக்கு பொதுவாக மக்களிடம் ஆதரவில்லை. கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க சர்வ தேசீயம் என்று பேசினார்கள். அது நமது நாட்டில் எடுபடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பாட்டாளி வர்க்க சர்வ தேசீயம் என்பது எந்த நாட்டிலும் எடுபடவில்லை. அந்த சர்வ தேசீயம் பிறந்த ஐரோப்பாவிலேயே அது எடுபடவில்லை. கம்யூனிஸ்டு கட்சிகளே கூட பல நாடுகளிலும் தேசீய உணர்வு கொண்டே செயல் பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தேசிய உணர்வில் தடுமாற்றங்களும் வீழ்ச்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன. இன்று உலகில் உள்ள பெரிய நாட்டின் பெரிய கட்சியாக, ஆளும் கட்சியாக உள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன தேசீயத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது. எனவே பாட்டாளி வர்க்க சர்வ தேசீயம் என்பது செயலிழந்து விட்டது. கருத்தளவிலும், தோல்வியடைந்து விட்டது. இந்திய நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பல பிரிவுகளாக உடைந்து சிதரிக் கிடக்கின்றன. அவர்களுடைய சர்வ தேசீயமும் சரி, தேசீயமும் சரி, மொழிவழி தேசீய இனக்