பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதநாட்டில் தேசீய இயக்கங்கள் 下煎 இதே காலத்தில் இந்திய தேசிய இயக்கங்களில் சில எதிர் மறைப் போக்குகளும் பிரிவினைப் போக்குகளும் வெளிப்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்த போது, உலகெங்கும், காலனி நாடுகளில் தீவிரமான சுதந்திரப் போராட்டப் பேரொலி வெளிப்பட்டு பல நாடுகளும் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு பல சுதந்திர நாடுகள் தோன்றத் தொடங்கின. தேசீய சுதந்திரம் பற்றிய கருத்துக்களும் கருத்து வடிவங்களும் விரிவு பட்டன. --- பாரத நாட்டில் 1945-46-ம் ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் சுதந்திர எழுச்சி ஏற்பட்டது. இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்தாக வேண்டும் என்னும் கட்டாயம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஏற்பட்டது. அப்போது இந்திய தேசீய காங்கிரஸின் தேசீயக் கருத்துக்கள் முன்னுக்கு வந்தன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பூகோளப் பகுதிகளை இந்திய தேசம் என்றும், அதன் உணர்வு நிலையாக இந்திய தேசியமும், தேசீயக் கருத்துக்களும் வெளிப்பட்டன. இந்த தேசீயம் பெரும் பாலும் ஐரோப்பிய சிந்தனை அடிப்படைலேயே உருவாயிற்று. இந்தியாவின் பூகோள அமைப்பு, அரசியல் எல்லைக் கோடுகள், மக்கள் பிரிவுகள், அடிப்படையிலேயே அந்த தேசியம் விளக்கப் பட்டது. இந்தியா என்பது எப்போதும் ஒன்றாக ஒன்று பட்டு இருந்ததில்லை என்றும் ஆங்கிலேயர்கள்தான் இந்தியாவை பூகோள ரீதியிலும் அரசியல் அடிப்படையிலும் ஒன்று படுத்தி, இந்திய தேசம் என்று ஒன்றை உருவாக்கினார்கள் என்றும் பேசப் பட்டது. இன்றும் கூட அக்கருத்துக்கள் பேசப் படுகின்றன. இந்திய தேசீய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறிய தேசியத்தை அன்றைய அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்த்தார்கள். இந்திய தேசீயக்