பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பாரதியின் சிந்தனையும் அனுபவமும் பாரதியார் புதுச்சேரியில் 1910 முதல் 1919-வரை வாழ்ந்து வந்தார். அப்போது அவருக்கு நன்கு அறிமுகமாகியிருந்த ரீ குஞ்சிதயாதம் அவர்கள் எழுதியிருந்த “பாரதி நினைவுகள் பற்றிய கட்டுரைகள் பாரதி நூற்றாண்டு விழாவின்போது ஒரு தனி நூலாக வெளிவந்தது. அந்த நூலுக்கு தமிழ் நாட்டின் மிகவும் பிரபலமான பேரறிஞர்களில் ஒருவரான டி.எம்.பி. மகாதேவன் ஒரு முன்னுரை எழுதியுள்ளார். அம்முன்னுரையில், 1907-ம் ஆண்டு வாராணசியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசுக்குச் சென்றுவிட்டுப் பாரதியாரும் அவரோடு சில தென் இந்திய நண்பர்களும் கல்கத்தா வந்து ரீ அனந்த மோகன் போஸின் மாளிகையில் சில நாட்கள் தங்கினார்கள். அப்போது ஒரு நாள் நிவேதிதா அம்மையார் அங்கு வந்திருந்தார்கள் அந்த மாளிகையின் வாயிலில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் பாரதியாரை அழைத்துச் சென்று, பாரதமாதாவின் வானளாவிய திருவுருவத்தைக் காட்டினார். அதிலிருந்து அவ்வம்மையாரைத் தமது குருவாக பாவித்து வந்தார். இந்த விஷயத்தைச் சொன்னபோது தீக்ஷதருக்கும் அவருடைய மகனாருக்கும் குஞ்சிதபாதம்) எப்படி ஒரு வெள்ளைக்கார மாது பாரதியாருக்கு குருவாக இருக்க முடியும் என்று வியப்பாக போலல்ல_என்பதைப்-பாரதியார் உணர்ந்திருப்பதை நிவேதிதா அம்மையாரைத்_தம்முடைய_குருவாக-ஏற்றது காண்பிக்கிறதல்லவா?” என்று குறிப்பிடுகிறார். (அடிக்கோடிட்டுருப்பது என்னுடையது -நூலாசிரியர்) மேலும் அந்த முன்னுரையில், “பாரதி சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் தாமே பாடியும் ஸ்வதந்திர தாகத்தை மக்களுக்குப் புகட்டினார். இந்த சமயத்தில் ரீ குஞ்சிதபாதம் சென்னைக்கு வந்து குடி புகுந்தார். அவர் தங்கியிருந்த வீட்டை அறிந்து கொண்டு அவ்வப்போது பாரதியார் அங்கு சென்று புதுவை நண்பர்களுடன் அளவாளாவுவது வழக்கம். எத்தனையோ