பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ரீகிருஷ்ணனுடைய விஸ்வரூப தரிசனம் கண்ணன் அர்ஜூனனுக்குக் காட்டியது பரமாத்மாவின் விஸ்வரூபம் அதாவது உலகப் பெருவடிவம். பிரபஞ்சத்தின், அதாவது இந்தப்பேருலகின் முழுமையான தோற்றமாகும். அத்தோற்றத்தில் த்து அண்டங் i ம், ஆறுகளும் கடல்களும் மக்களும் தேவர்களும் விலங்குகளும் பறவைகளும் இதர ஜீவராசிகள் அனைத்தும் காணப்படுகின்றன. மனிதர் தேவர் உள்பட அனைத்து ஜீவராசிகளின் தோற்றங்களும் நிலைபாடுகளும் மாற்றங்களும் உயிர்த்துடிப்புடன் காணப்படுகின்றன. பாரதியார் தனது பகவத் கீதை தமிழாக்க நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் கடவுளின் தோற்றத்தைப் பற்றி அந்த அற்புதமான காட்சியைப் பற்றிக் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார். ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம். எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும் எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாச் செயல்களும், எல்லாம் ஈசன் மயம். (ஆதலால் எல்லாம் ஒன்றுக் கொன்று சமானம்) என்று குறிப்பிட்டு விளக்கிக் கூறுகிறார். விஸ்வரூப தரிசனம் பகவத் கீதையின் 11-ம் அத்தியாத்தில் விஸ்வரூப தரிசனம் கூறப் படுகிறது. “றுநீபகவான் சொல்லுகிறார். “பல நூறாகவும் பல்லாயிரமாகவும் வகை பல நிறம் பல அளவு பலவாகும் என திவ்ய ரூபங்களைப் பார், பார்த்தா-5 ஆதித்யர்களைப் பார், வசுக்களைப்பார், அசுவினி தேவரைப் பார், மருத்துக்களைப்பார், பாரதா, இதற்கு முன் கண்டிராத பல