பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீகிருஷ்ணருடைய விஸ்வருப தரிசனம் இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றன. சிலர் அச்சமெய்தி நின்னைக் கை கூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும், சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வன்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார். - 21. ருத்ரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவே தேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர், இக்கூட்டத்தார்களெல்லாம் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர். – 22. பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும் பல கைகளும் பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன யானும் அங்ங்னமே - 23. வானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது, திறந்த வாய்களும், கனல்கின்ற விழிகளுமுடையது. இளைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலை கொள்ள வில்லை. யான் அமைதி காணவில்லை - 24. அஞ்சு தரும் பற்களையுடைத்தாய், ஊழித்தீ போன்ற நின் முகங்களைக் கொண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை. சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே, வையகத்துக்கு உறைவிடம் ஆவாய், அருள் செய்க - 25. இந்தத் திருதராஷ்டிரனின் மக்கள் எல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்) பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும் நம்முடைய பக்கத்து முக்கிய விரர்களும் - 26 கொடிய பற்களுடைய பயங்கரமான நின்வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடி பட்ட தலையினராகக் காணப்படுகின்றனர் - 27. பல ஆறுகளின் வெள்ளங்கள், கடலையே நோக்கி வந்து