பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் 28 வீழ்வது போல் இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர் - 28. விளக்குப் பூச்சிகள் மிகவும் விரைவுடன் எய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாச முறுதல் போல உலகங்கள் மிகவும் விரைவுடன் நின்வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன-29. கனல் நின்ற நின்வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய் விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் கதிர்களால் வைய முழுதையும் நிரப்பிச் சுடுகின்றன-30. உக்கிர ரூபம் தரித்த நீ யார்? எனக் குறைத்திடுக. தேவர்களில் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள் புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன் - 31. பூரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கு இரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்ச மாட்டார்கள் - 32. ஆதலால் நீ எழுந்து நில். புகழ் எய்து, பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள், நான் இவர்களை ஏற்கனவே கொன்றாய் விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக் காரணமாக மட்டுமே நின்று தொழில் செய் - 33. துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும் கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய் விட்டது. (வெளிப்படையாக) நீ கொல். அஞ்சாதே, போய் செய். செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய் - 34. சஞ்சயன் சொல்லுகிறான்: