பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீகிருஷ்ணருடைய விஸ்வரூப தரிசனம் 29. கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான். - 35. அர்ஜூனன் சொல்லுகிறான்: இருவிகேசா, உன்பெரும் கீர்த்தியில் உலகங்களிப்பதும், இன்புறுவதும் பொருந்தும், ராட்சதர் அச்ச முற்று திசைகளில் மறைகிறார்கள். சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள் - 36. மகாத்மாவே, நின்னை எங்ங்ணம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய். அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள். நீ சத், நீ அசத் நீ அவற்றைக் கடந்த பிரம்மம் - 37. நீ ஆதிதேவன், தொல்லோன். நீ இந்த அகிலத்தின் பரமநிலையம் நீ அறிவோன். நீ அறிபடுபொருள், நீ பரமபதம், அகந்த ரூபா, நீ இவ்வுலகினுள் பரந்து கிடக்கிறாய் - 38. நீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டனாகிய பிரம்மன் நீ. உன்னை ஆயிரம் முறை கும்பிடுகிறேன். மீட்டு மீட்டும் உனக்கு நமோ நம! - 39. உன்னை முன் புறத்தே கும்பிடுகிறேன். உன்னைப் பின் புறத்தே கும்பிடுகிறேன். எல்லாமாவாய் உன்னை எப்புறத்தும் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரிய முடையாய், அளவற்ற வலிமையுடையாய். சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய். ஆதலால் நீ சர்வன் - 40 இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல் நின்னைத் தோழன் என்று கருதித் துடிப்புற்று, ஏ, கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான்