பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் என் தொழில் செய்வான், எனைத் தலைக் கொண்டோன் என்னுடைய அடியான் பற்றெல்லாம் இற்றான் எவ்வுயிரிடத்தும் பகைமை யிலாதான் யாவன் பாண்ட வா! அவனென்னை எய்துவான் - 55 இங்ங்ணம் உபநிஷத்தும், பிரம்ம வித்தையும் யோக சாஸ்திரமும், ரீகிருஷ்ணார்ஜுன சம்பாஷணையுமாகிய ரீமத் பகவத் கீதையில் விஸ்வ ரூப தரிசன யோகம் என்ற பதினொன்றாம் அத்தியாயம் முற்றிற்று. இவ்வாறு ரீமத் பகவத் கீதையின் விஸ்வரூப தரிசன யோகம் குறிப்பிடுகிறது. இது பாரதியாரின் பகவத் கீதை தமிழாக்க மொழி பெயர்ப்பிலிருந்து எடுக்கப் பட்டது. நேரடியான தெளிவிற்காக ரீமத் பகவத் கீதையின் விசுவரூப தரிசன யோகம் முழுமையாக இங்கு மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது. நூலாசிரியர்).