பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பாரத தேவியின் சம்பூரண ரூபம் இவ்வாறு ரீகிருஷ்னன் அர்ஜூனனுக்கு விஸ்வரூபம் காட்டி ஆத்ம நிலையை விளக்கிய தொப்ப எனக்குப் பாரத தேவியின் லம்பூரண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளியதாகத் தனது குருவைக் குறிப்பிடுகிறார் பாரதியார். ஜன்மபூமி (ஸ்வதேச கீதங்கள் இரண்டாம் பாகம்) என்னும் நூலில் உள்ள ஸ்மர்ப்பணமும் முன்னுரையும் என்னும் குறிப்பில் பாரதியார் பின்வருமாறு குறிப்பிடுகிறார். எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குரு மணியும் பகவான் விவேகானந்தருடைய தரும புத்திரியுமாகிய யூரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கிறேன். மகாகவி சிந்தனை செய்கிறார். ஆழ்ந்த சிந்தனையில் ஈடு படுகிறார். அவருடைய சிந்தனை வெகுதூரம் செல்கிறது. அந்த மாபெரும் மனிதனின் அகக்கண்களின் நெடிது நோக்கில் பாரத தேவியின் சம்பூரண வடிவம் காணப்படுகிறது. அதை அவர் தமிழ் மக்களுக்கும் பாரத மக்களுக்கும் உலகுக்கும் தனது உணர்ச்சி மிக்க கவிதைகள் மூலம் காட்டுகிறார். சூரியன் உதிக்கும் போது சேதனப்பிரகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும் புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கிறது. இவற்றினையொப்பவே, நாட்டில் ஒரு புதிய ஆதர்சம் - ஓர் கிளர்ச்சி, ஓர் தர்மம் - ஓர் மார்க்கம் - தோன்றுமே யானால் மேன் மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரிய காந்த மலர் போல அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன என்றும் ஜன்ம பூமி பாடல் தொகுப்பிற்கான தனது முன்னுரையில் பாரதி குறிப்பிடுகிறார். சூரியன் உதிக்கத் தொடங்கிய உடனேயே உறங்கிக் கிடந்த உலகம் எல்லாம் விழித்தெழுந்து அசையத் தொடங்குகிறது. பறவை