பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத தேவியின் சம்பூரணரூபம் 邸 | யினங்கள் தங்கள் இனிய கானத்தைக் கிளப்புகின்றன. ஆவினங்களும், எருமைகளும், இதரவிலங்கினங்களும் எழுந்து செயல் படத் தொடங்குகின்றன. செடி கொடிகளும் மலர்களும் புத்துயிர் பெற்று அசைந்து மணம் பாப்பத் தொடங்குகின்றன. மக்கள் குலம் எழுந்து தங்கள் தங்கள் வேலைகளைச் செய்யத் தொடங்குகின்றன. புள்ளும் சிலம்பின காண், புள் அரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ என்றும், கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ என்றும், கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறு வீடு மேய்வான் பரந்தன காண் என்றும் ஆண்டான் திருப்பாவைப் பாடல்கள் குறிப்பிடுவதைக் காண்கிறோம். மகாகவி பாரதி புதிய ஆதர்தம் பெற்று தேசபக்தி என்னும் நவீன மார்க்கத்தின் வழியில் பாரத மாதாவின் சம்பூரண வடிவத்தை நமக்குக் காட்டுகிறார். பாரத தேவியின் அந்தப் பெருவடிவத்தில் மகாகவி பாரதி வெள்ளிப் பனிமலையைக் காண்கிறான். மேலைக் கடலைக் காண்கிறான். அதில் நமது பெருவணிகர்கள் கப்பல்கள் விடுவதைக் காண்கிறான், அதில் புனிதமான சேதுவைக் காண்கிறான். அந்தப் புண்ணிய சேதுவைக் கண்ட போது, கங்கையே, யமுனை கோதாவரி நருமதை காவேரி பொங்குநீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா - சங்கு எறி தாங்க வேலைதட்ட, இச்சேது என்னும் இங்கிதின் எதிர்ந்தோர் புன்மையாவையும் நீக்கும் அன்றே என்று சேதுவின் பெருமையைக் கூறும் கம்பனுடைய சொற்கள் நினைவுக்கு வருகின்றன. கவிஞன் மேலும் கங்கையிலும், யமுனையிலும் பொங்கி வரும் நீரின் மிகையைக் காண்கிறான். அந்த நீரின் மிகையை மய்யத்து நாடுகளுக்குக் கொண்டு செல்லலாம் என்று