பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் Lo சிந்திக்கிறான். தென்கடலில் முத்துக் குளிப்பதைக் காண்கிறான். சிந்து என்னும் தெய்வத்திரு நதியின் அமைதியான நீரோட்டத்தைக் காண்கிறான். அப்போது கவிஞனுக்கு நிலவொளியும், சேர நன்னாட்டு அழகு தேவதைகளும் சுந்தரத் தெலுங்கின் நல்லிசை மிக்க பாடல்களும் நினைவிற்கு வருகின்றன. கங்கை நதிப் புறத்து கோதுமைப் பண்டங்களும், காவிரியின் மணம் நிறைந்த கமுகும் வெற்றிலையும், சேரத்துத் தந்தங்களும், கன்னடத்து சந்தனமும், கவியின் கண்களுக்குப் புலப்படுகின்றன. காசியும் காஞ்சியும் அவனுடைய கண்களுக்குக் காணப்படுகின்றன. அந்த நகரங்களின் மக்கள் கலந்து உரையாடிக் கொண்டிருக்கும் நுட்பமான கருவிகளைக் காண்கிறான். பட்டினிலும் பஞ்சினிலும் ஆடைகள் செய்து மலைகள் எனக் குவிக்கும் நமது நெசவாளர்களைக் காண்கிறான். ஆயுதங்கள், பல வகைக் காகித ஆலைகள், குடைகள் படைகள், கோணிகள், இரும்பாணிகள் கப்பல்கள் செய்யும் பலவகை ஆலைகளைத் தொழிற் சாலைகளைக் காண்கிறான். நாடு முழுவதிலும் பல லட்சக்கணக்கானோர், மந்திரங்கள் கற்கவும், வினைத்தந்திரங்கள் கற்கவும், எந்திரங்கள் செய்யவும், வானையளக்கவும், கடல் மீனை அளக்கவும், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளியவும், சந்தி தெருப்பெருக்கும் சாத்திரங்கள் பல கற்கவும், காவியம் செய்யவும், காடுகள் வளர்க்கவும், ஒவியம் செய்யவும், நல்ல ஊசிகள் செய்யவும், உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்யவும் பயிலும் பலவகைக் கல்விச் சாலைகளும் தொழிற் சாலைகளும் அமைக்கவுமான பாரத தேசத்தின் விரிவைக் கண்டான் கவிஞன். இன்னும் பாரத தேசத்தின் மிகப் பெரிய விரிவான வடிவத்தைப் பாரதி மீண்டும் மீண்டும் காண்கிறான். அதில் மன்னும் இமயமலையும் இன்னறு நீர் கங்கையாறும், வேதங்களும், உபநிடதங்களும், இதிகாசங்களும், புராணங்களும், மற்றும் பலவகை நூறு கோடி நூல்களும் அறிவுக் கருவூலங்களும் மாரத வீரர்களும் மாமுனிவோர் பலரும் காணப்படுகிறார்கள்.