பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு 43 தமிழகத்தின் பழம் பெருமைகள் பாரதியின் கண்களின் முன்பாக ஒவ்வொன்றாகத் தோன்றிச் செல்கின்றன. இலங்கை, புட்பகம், சாவகம் முதலிய தீவுகள் பலவற்றிற்கும் சென்று அங்கு தங்கள் புலிக்கொடி மீன் கொடிகளை நாட்டிய தமிழ் நாட்டையும், விண்ணையிடிக்கும் தலை இமயம் என்னும் வெற்பை (நெடு மலையை யடிக்கும் திறனுடையார் என்றும் சமர் செய்து கலிங்கத்து இருளைப் போக்கிய தமிழ் நாட்டையும் நினைத்துப் பார்க்கிறார். சீனம், மிசிரம், யவனம் மற்றும் தேசம் பலவும் புகழ் வீசிக் கலை ஞானம், படைத்தொழில், வாணிபம் ஆகியவற்றையும் நன்று வளர்த்த தமிழகத்தை நினைத்துப் பார்க்கிறார். ஆதிசிவன் பெற்ற தமிழையும், அகத்தியன் இலக்கணம் வகுத்த தமிழையும், மூன்று தமிழ் மன்னர்கள் போற்றி வளர்த்த தமிழையும், தமிழ் தந்த சாத்திரங்கள் பலவற்றையும், சங்கத்தமி ழையும், அற நூல்களையும், ஐம்பெருங்காப்பியங்களையும், சைவத் திருமுறைகளையும், திவ்யப் பிரபந்தங்களையும், கம்பனையும், வள்ளுவனையும், இளங்கோவையும், தாயுமானவரையும், பட்டினத்தாரையும், வள்ளலாரையும், சுப்ரமணிய அய்யரையும், நினைத்துப் பெருமிதம் கொள்கிறார். பாரதியின் மெய் சிலிர்க்கிறது. தமிழையும், தமிழ் நாட்டையும் அதன் பெருமைகளையும் தன் உணர்வின் உணர்வாக கொள்கிறார். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிய தாவதெங்கும் காணோம். பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப்பான்மை கெட்டு நாம் ஏன் வாழ்கின்றோம்? யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல, இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை. ஊமையராய் செவிடர்களாய், குருடர்களாய் நாம் ஏன் வாழ்கின்றோம்? என்று மன முறுகி நிற்கிறார் கவிஞர். அவருடைய உடல் சிலிர்க்கிறது. உள்ளம் பொங்குகிறது.