பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத பூமி பழம்பெரும் பூமி – لتل பெண்கள் எல்லாம் சக்தியின் வடிவமாகவே கவிஞனுக்கு காணப் படுகிறார்கள். இத்துடன் பாரத புண்ணிய பூமியில் அன்னியர்களும் அன்னிய ஆங்கிலேயர்களும் செய்துள்ள சேதங்களும் ஏற்படுத்தியுள்ள் படு காயங்களும் பாரதியின் கண்களுக்குத் தென் படுகின்றன. பாரதத்தில் தோன்றிய கணித மேதைகள், வானியல் வல்லோர், ஆயிரமாயிரம் காவியங்கள் செய்த கவிஞர், இசை மேதைகள், சிற்பிகள், வணிக நூல்களும், பொருள் நூல்களும் இயற்றியோர் மற்றும் கம்பன் என்றொரு மானிடன், காளிதாசன், உம்பர் வானத்து கோளையும் மீனையும் அளந்த பாஸ்கரன், ஆரியபட்டன, இலக்கணம் கண்ட பாணினி, அகத்தியன் தொல்காப்பியன், ஆதி சங்கரர், இராமானுசர், சேரன் தம்பி, தெய்வ வள்ளுவன், பாண்டிய சோழர்கள், அசோகன், சிவாஜி அன்னயாவும் பாரதியின் கண்ணுக்குப் புலப்படுகின்றன. அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின் மீது தனியரசாணை, பொழுதெல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல் என்றிவையருளாய், குறிகுணம் இல்லாததாய் அனைத்தாய்க் குல விடும் தனிப்பரம்பொருளே என்று கூறி பாரதி தனி ஆதர்சம் பெறுகிறான். புதிய தேசபக்தி என்னும் புதிய மார்க்கம் தோன்றி நடெங்கும் புதிய அசைவுகள் வெளிப்படுவதைக் கவிஞன் காண்கிறான். சத்திரபதி சிவாஜி தனது சைன்யத்திற்குக் கூறிய வீர உரை பாரதியின் நினைவிற்கு வருகிறது. குரு கோவிந்த சிம்மர் தனது வீரர்களுக்குக் கூறிய வார்த்தைகள் பாரதியின் நினைவிற்கு வருகின்றன. பங்கிம் சந்திரரின் வந்தே மாதர கீதம் பாரதியின் நினைவிற்கு வருகிறது. இராம கிருஷ்ண பரமஹம்சரும் சுவாமி விவேகானந்தரும், இராமலிங்க சுவாமிகளும், அபேதானந்தரும், தாதாபாய்