பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நிறைவுறை பாரத தேசீயம் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழல்வதல்ல. அது ஒரு அனைத்தளாவிய உலகளாவிய பிரம்மாண்டமான தர்மசக்கரத்தில் சுழல்வதாகும். லோக கூேடிமம், உலக நன்மை என்பதே நமது மகா மந்திரமாகும். அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும் என்பதே நமது பிரார்த்தனையாகும். உலகம்யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் என்பது கம்பன் வாக்கு. உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் என்பது சேக்கிழாரின் சொல். அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்பது வள்ளுவப் பேராசானின் தொடக்கம். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பது ஆனந்தமயமான தமிழ்ச் சொல். அதனால்தான் வையத் தலைமை எனக்கருள்வாய் தாயே என்று பாரதி பராசக்தியை வேண்டுகிறார். வையத்தலைமைகொள் என்று பாரத புத்திரர்களுக்கு பாரதி வேண்டுகோள் விடுகிறார். பாரதி வாழ்க, பாரதி புகழ் வாழ்க பாரதியின் தேசீயம் வாழ்க வளர்க வந்தே மாதரம்! வந்தே மாதரம்!