பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியா பற்றி 52 சிவகாசி பாராளுமன்றத் தொகுதியில் 1984-ம் ஆண்டிலும் 1991-ம் ஆண்டிலும் போட்டியிட்டு மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருமுறையும் பம் ஆண்டில் இந்திரா காந்தி படுகொலை, 1991-ம் ஆண்டில் ா காந்தி படுகொலை காரணமாக ஏற்பட்ட அலை அவருக்கு பாதகமாக அமைநதது. திரு.அ. சீனிவாசன் தனக்கு ஏற்பட்ட பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி 1000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி பாரதீய ஜனதா கட்சி யில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் மாநில அளவிலான பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார். இப்போது பாதிய ஜனதா கட்சியின் மாநில இலக்கிய அணித் தலைவராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார். ஒரே நாடு, விஜய பாரதம் ஆகிய பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறார். தமிழ் இலக்கியம் தொடர்பான, குறிப்பாக பாரதி, கம்பன், சிலப்பதிகாரம், நாலாயிரத்திவ்ய பிரபந்தம் தொடர்பான Լlt;ն நூல்கள் எழுதியும் வெளியிட்டும் வருகிறார். மகாகவி பாரதி பற்றிய ஈடுபாட்டின் காக அவர் பாரதி அ. சீனிவாசன் என்று அழைக்கப்படுகிறார். பாதி தொடர்பான வேறு பல நூல்களை எழுதி வருகிறார். தமிழ் இலக்கியம் தொடர்பாக அண்மைக்காலத்தில் அவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியல் இந்நூலின் பின் அட்டையில் காலாம்.