பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் |2 இந்திய தேசீய விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியின் காலப்போக்கில் இந்திய தேசியம் பற்றி, பாரதப் பண்பாட்டு தேசியம், இந்திய தேசீயம், மொழிவழி தேசீயம், திராவிட தேசியம், தமிழ் தேசீயம், போன்ற கருத்துப் போக்குகளும் வெளிப்பட்டன. குறிப்பாக மத அடிப்படையில் முஸ்லிம் தேசீயம் என்னும் கருத்து வலுப்பட்டு, நாடு சுதந்திரம் அடைந்தபோது இரண்டு நாடுகளாக இரண்டு அரசுகளாக, பின்னர் மூன்று அரசுகளாகப் பிரிந்து போயிற்று. ஆனால் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தேசிய விடுதலை உணர்வு தீவிரமாக நாட்டு மக்களிடத்தில் பரவத் தொடங்கிய போது, மகாகவி சுப்ரமணிய பாரதி, பாரத தேசியம் பற்றி தனது தேச பக்தப் பாடல்களில் புதிய கருத்துக்களை வெளியிட்டார். தேசபக்தியையும் தெய்வ பக்தியையும் இணைத்தார். பாரத தேசத்தை, பாரத மாதாவாக, மகா சக்தியாகக் கண்டார். நாடு பிரிவினையாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சேதமில்லாத இந்துஸ்தானம் என்னும் கருத்தை வெளிப்படுத்தினார். இன்றும் பாரத தேசீயம் என்னும் கருத்து வடிவம் பற்றிய புரிதலில் பல நிஜங்கள் (உண்மை நிலைகள்) வெளிப்பட வேண்டியதிருக்கிறது. பலதப்பெண்ணங்கள் தீர்க்கப்பட வேண்டியதிருக்கிறது. பாரத தேசீயத்தின் அடிப்படையில், பாரத நாட்டு மக்கள் அனைவரும் முழுமையாக ஒன்றுபட்டு நின்று கட்டிப்பட வேண்டியதிருக்கிறது. மகாகவி பாதி தனது தேச பக்தப் பாடல்களைச் சிறு நூலாக வெளியிட்ட போது அதன் முன்னுரையாக பகவான் ரீகிருஷ்ணன், அர்ஜூனனுக்கு தனது விஸ்வரூபத்தைக் காட்டி ஆத்ம நிலையை விளக்கியதொப்ப, எனக்கு எனது குருமாமணி பாரத தேசத்தின் பேருருவத்தைக் காட்டியுள்ளார் என்று குறிப்பிடுகிறார். அதற்கொப்ப மகாகவி பாரதி பாரத தேசத்தின், பாரத தேசீயத்தின் பேருருவத்தைத் தனது தேச பக்தப் பாடல்களில் நமக்குக் காட்டுகிறார்.