பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை மார்கழி மாதப் பணியில், அதிகாலையில் எழுந்து நாம் வெளியே செல்லும் போது, சூரியோதயத்தின் போது, வெளியில் புல் வெளியில் ஒரு அருகம்புல்லின் நுனியில் படிந்திருக்கும் பணித் துளியில் காலைச் சூரியனின் முழுவட்டம் காணப்படுவதைப் போல, மகாகவி பாரதி, காட்டியுள்ள பாரத தேசீயத்தின் முழுவடிவத்தை இந்தச் சிறு நூலில் எடுத்துக் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளேன். பாரத தேசீயம் மகா சக்தி வாய்ந்த பெருவடிவம். ரீகிருஷ்ணனின் விஸ்வரூபதரிசனத்திற்கு ஒப்பானது. அந்தப் பெருவடிவத்தை நமது மனதில் பதிய வைக்க முயல வேண்டும். இந்தச் சிறு நூலை எழுதுவதற்கு அருள் புரிந்த பாரதத் தாயை வணக்குகிறேன். அதற்கு வழிகாட்டியாக இருந்த பாரதியின் ஆதர்சத்தைப் பணிந்து போற்றுகிறேன். இந்த நூலை எழுதுவதற்கு ஊக்கமளித்து, உதவி செய்து அச்சிட்டு வெளியிட உதவிய எனது நண்பர்கள், சகோதரர்கள் அனைவருக்கும் எனது பணிவான அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சிறு நூல் பாரத நாட்டின் இளைஞர் அனைவரின் கைகளில் தவழச் செய்ய அனைவரையும் வேண்டுகிறேன். - அ. சீனிவாசன்