பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாரதியின் புதிய ஆத்திசூடி O

பயம் என்பது ஒரு பேய். அது ஒரு பொய். எனவே பயம் கூடாது. பயம் பீடித்தால் மனிதன் நாசமடைந்து போவான். பயம் ஏற்பட்டு விட்டால் மனிதன் அடிமைப்பட்டு விடுவான். பாரதி காலத்தில் நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. மக்களின் பெரும்பாலோர் அஞ்சி அஞ்சி செத்தார்கள். எதற்கும் அஞ் சினார்கள். அதனால் மக்களுக்கு துணிவு உண்டாக்குவதற்காக அஞ்சேல் அஞ்சேல் என்று பாரதி அடிக்கடி கூறினார்.

அடிமைப்பட்டு கிடந்த பாரத மக்களின் பரிதாபகரமான நிலைமையைப் பற்றி பாரதி :

'அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’’

என்று குறிப்பிடுகிறார்.

அரசு நடத்துவதற்கு நாம் வரி கொடுக்கிறோம். நாம் வாங்கி உபயோகிக்கும் பொருள்களின் விலைகளில் எல்லாம் வரியும் அடங்கியுள்ளது. இவ்வாறு நாம் கொடுக்கும் வரிப்பணத்தைக் கொண்டு அரசுகள் நாட்டை ஆள்கின்றன. அந்த அரசியலைக் கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும். அதை பாரதி.

தந்த பொருளைக் கொண்டே - ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்

அந்த அரசியலை - அவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்’

என்று குறிப்பிடுகிறார். அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்கள் நிலை.

'சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்கள் ஊர்ச்சேவகன் வருவதைக் கண்டு மனம் பதைத்து பயந்து சாவர்கள் துப்பாக்கி கொண்டு ஒருவர் வெகுதுரத்தில்