பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 91

வருவதைக் கண்டு விட்டிற்குள் ஒடி ஒளிவார்கள் அப்பால் வேறு ஒருவன் வந்தால் அவனுடைய ஆடைகளைக் கண்டு பயந்து எழுந்து நிற்பார்கள் எப்போதும் கைகட்டி பயந்து நிற்பார்கள்’’

என்று கூறி மனம் நொந்தும் அதே சமயத்தில் உணர்ச்சி வேகத்துடன் அஞ்சேல் அஞ்சேல் என்று நம்மைத் தட்டி எழுப்புகிறார். குறிப்பாக தீயோர்க்கு அஞ்சேல் என்று இளைஞர்களுக்கு துணிவூட்டுகிறார்.

'பாதகம் செய்பவரைக் கண்டால் - நாம் பயங் கொளளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா'

என்று பாரதி பாப்பாவுக்காகப் பாடுகிறார்.

நன்மை வந்தெய்துக, தீதெலாம் நலிக, அறம் வளர்த்திடுக, மறமடிவுறுக என்று தீதுகள் ஒழியவும் அதர்மம் அழியவும் பாரதி வாழ்த்துக் கூறுகிறார்.

'நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே - கெட்ட நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததே ’’

என்று பாரதி குரல் கொடுக்கிறார்.

தீயவர்கள், கெட்டவர்கள், பாதகர்கள், சமூகத்திற்கு எதிரானவர்கள், கொடுங்கோலர்கள், கொடுமைக்காரர்கள், தேசவிரோதிகள். முதலியோருக்கு அஞ்சாமல் அவர்களை எதிர்த்துப் போராடி அத்தீய சக்திகளைப் மாய்க்க வேண்டும் என்பதை பாரதி வலியுறுத்திக் கூறுகிறார்.

46. துன்பம் மறந்திடு

நமக்கு அடிக்கடியும் அவ்வப்போதும் துன்பங்கள் துயரங்கள், இன்னல்கள் ஏற்படுகின்றன. அதைக் கண்டு நாம் கலங்கக்