பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பாரதியின் புதிய ஆத்திசூடி-9

கூடாது. அதை ஒரு கெட்டகனவு போல் அப்போதே மறந்து விட வேண்டும் என்று பாரதி கூறுகிறார்.

'இன்று எமை வருத்தும் இன்னல்கள் மாய்க’

என்றும்

“என்று நமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகி மறையும்” என்றும் கூறுகிறார்.

பாரதிக்கு திலகர் மீது நல்ல பற்றுதல் உண்டு. உயர்வான மதிப்பும் மரியாதையும் உண்டு. திலக ரைப் பற்றி பல கோணத்திலும் பாரதி பாடியுள்ளார். திலகர் தேசிய இயக்கத்தில் தீவிரவாதிகள் பிரிவின் தலைவர். திலகரைப் பற்றி.

துன்பம் என்னும்கடலைக் கடக்கும் தோணி அவன் பெயர்’ என்று குறிப்பிடுகிறார். நமக்கு வரும் துன்பங்கள் கடலைப் போல் இருந்தாலும் அதனைத் திலகரைப் போன்ற தலைவர்களின் வழிகட்டுதலை

அறிவுரைகளைத் தோணிகளாகக் கொண்டு அத்துன்பக் கடலைக் கடக்க வேண்டும் என்று பாரதி குறிப்பிடுகிறார்.

'துயர்கள் தொலைந்திடுக கவலைப்படுதலே கருநாகமாம் கவலையற்றித்தலே முக்தி' என்று துன்பத்தை மறந்திட பாரதி வழிகாட்டுகிறார்.

துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி என்று இறைவனை வேண்டி அகவல் பாடுகிறார்.

"துன்பம் நீக்கிவிட்டாய் - காளி தொல்லை போக்கிவிட்டாய்”

என்று காளியிடம் கூறுகிறார்.

துன்பமே இயற்கையெனும்

சொல்லை மறந்திடுவோம் இன்பமே வேண்டி நிற்போம்'