பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் - 95

உரிமைகள் மற்றும் விழிப்புணர்வுகளையும் உயர்த்துவதே அரசியல் கட்சிகளின் முதல் கடமையாகும். அதை விடுத்து இன்றைய அரசியல் கட்சிகளில் உள்ள பல அரசியல்வாதிகளும் எப்படியாவதுபதவிக்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் வர வேண்டும் என்னும் நொக்குடன் மற்றவர்களை அவதூறு செய்வது அரசியலின் ஒரு பகுதியாக்கி ஜனநாயக அரசியலை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தற்கால அரசியலில் லஞ்சம் ஊழல் அவதூறு, மோசடி, கோஷ்டிப் போக்குகள், வேண்டியவர்களுக்கு சலுகை, ஏமாற்றுதல், பொதுச் சொத்துக்ளைக் கொள்ளையடித்தல், கையாடல் கருப்புப்பணம் சேர்த்தல் கடத்தல் முதலிய பல இழிசெயல்களையும் அரசியல்வாதிகளும் ஆட்சிப் பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளும், இன்னும் கிரிமினல்களும் சேர்ந்து போது வாழ்வில் அவதூறுகளை அள்ளி வீச அரசியல் என்னும் அறநெறியைப் பெரிதும் மாசுபடுத்தி உள்ளார்கள்.

எனவே பாரதியின் தூற்றுதல் ஒழி என்பது இன்றைக்கும் பொருத்தமானதாகும். 48. தெய்வம் நீ என்று உணர்

பாரதியின் புதிய ஆத்திசூடியில் இது ஒரு அருமையான செய்யுளாகும். குழந்தைகளைப் பார்த்து 'தெய்வம் நீ என்று உணர்” என்று போதிப்பது பாரதிக்கே உள்ள தனிச்சிறப்பாகும். பாரதியே, நீ வாழ்க.

குழந்தையே தெய்வம் என்னும்கருத்திலும் கடவுள் எல்லா இடத்திலும் உள் ளான், உன்னிலும் என் னிலும் சகல பொருள்களிலும் உள்ளான் என்னும் கருத்திலும் 'தெய்வம் நீ என்று உணர்’ என்று குழந்தையிடம் பாரதி கூறுகிறார்.

பாரதியின் தெய்வக் கொள்கை பொது மைக் கொள்கையாகும். ஒரு சார்பு கொண்டதல்ல. பாரதி தேசத்தையே தாயாக பராசக்தியாக பாஞ்சாலியாக பாவித்துப் பாடுகிறார். ‘பாரத மாதா என்று பாடுகிறார். தமிழ் தாய்’ என்று பாடுகிறார். பாரதி