பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

கற்றுணரும் படியும் வானநூல் பயிற்சி கொள்ளும்படியும் வேதம் புதுமை செய்யும் படியும் பாரதி கூறுகிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக "வையத்தலைமை கொள்" என்று ஆணையிட்டுள்ளார், அது ஒரு மிகப் பெரிய பொறுப்பும் கடமையுமாகும், வருங்காலத்தில் பாரதநாடு அரசியல் பொருளாதாரத் துறைகளிலும் கல்வி, கலாச்சாரத் துறைகளிலும், அறிவுத் துறைகளிலும், அறிவியல் துறைகளிலும் மற்றும் மனித வாழ்க்கையின் உலக மக்களின் அமைதியான நல்வாழ்விலும் சமுதாய முன்னேற்றத்திலும் உலகிற்கு வழிகாட்டுவதாக தலைமை வகிப்பதாக அமைய வேண்டும் என்று பாரதி கட்டளையிட்டுள்ளார், "எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை, இந்தியா உலகிற்கு அளிக்கும்” என்று பாரதி உறுதி கூறியுள்ளார்.

பாரதியின் இந்தக் கட்டளைகளை நிறைவேற்ற நமது நாட்டு மக்களைக் குறிப்பாக இளம் தலைமுறையினரைத் தயாரிக்க வேண்டும். பாரதியின் இந்தப் புதிய ஆத்திசூடி சூத்திரங்கள் பெரும்பாலும் அவருடைய ஆணைகளாகவும் கட்டளைகளாகவும் வேண்டுகோள்களாகவும் அறிவுரைகளாகவுமே உள்ளன, எனவே நமது சிறுவர், சிறுமியர்களும், இளைஞர்களும் இந்த இப்புதிய ஆத்திசூடி சூத்திர வரிகளைப் படித்துப் பயனடைய வேண்டும், அவைகளைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்த விளக்கவுரை எழுத வேண்டும் என்னும் ஆவல் ஏற்பட்டது.

அனுபவத்திலிருந்து பல கருத்துக்களை விளக்கமாக எழுதி முடித்தபோது அது மிகவும் விரிவாகவும் அதிகமாகவும் இருந்தது என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன், எனவே எழுதி முடித்த பின்னர் அதைச் சரிபார்க்கு படி எனது அருமை நண்பர் பக்தவத்சலம் (பொன்னிலன்) அவர்களைக் கேட்டுக் கொண்டேன், நண்பர் பொன்னீலன் அவர்கள் சிறந்த எழுத்தாளரும், பாரதி பற்றும் அத்துடன் கல்வித்துறை அனுபவமும் உள்ளவர் என்பதை நாடறியும், அவரும் எனது வேண்டுகோளை ஏற்று நூலைச் சரிபார்த்து சில ஆலோசனைகளையும் கூறினார். வேலை மிகுதியால், காலம்