பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9B -பாரதியின்-புதிய ஆத்திசூடி O

என்று நாட்டைக் காப்பது பற்றி பாரதி கூறுகிறார்.

'பாரத பூமி பழம்பெறும் பூமி நிரதன் புதல்வர் இந்தினை வகற்றாதீர் பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம் நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்'

என்று பாரதி நமது நாட்டைப் பற்றி நமக்கு நினைவூட்டுகிறார்.

ஒரு ஆங்கிலேய அதிகாரி இந்தியனை இழித்து உரைப்பதாகக் கற்பித்து பாரதி கூறும் கவிதையில் ஆங்கிலேய

அதிகாரி கூறுவது.

'நாடு காப்பதற்கே - உனக்கு குானம் சிறிதும் உண்டோ விடு காக்கப் போடா - அடிமை வேலை செய்யப் போடா'

என்று இழிவாக ஆங்கில அதிகாரி பேசுகிறான். இதில் பாரதி காட்டும் கருத்து இப்படி அன்னியர் நம்மை இழிவுப்படுத்தும் நிலை கூடாது. மாற வேண்டும், நாம் நமது நாட்டைக் காக்கும் நிலை மாற வேண்டும் என்பதாகும். ஆங்கிலேயருடைய இந்த ஏளனப்பேச்சுக்கு மாறாக, முதலாவது உலகப்போரிலும் சரி, பின்னர் வந்த இரண்டாம் உலகப்போரிலும் சரி இந்திய தளபதிகளைக் கொண்ட இந்திய ராணுவம் இந்திய முப்படை தனது விரத்தைக் காட்டி நிரூபித்து நமது பாதுகாப்புத் திறனை மற்றவர்கள் அங்கீகரிக்கும் நிலை ஏற்பட்டது.

நாடு விடுதலை பெற்ற பின்னர் நமது நாட்டின் முப்படைகளும் நமது நாட்டைக் காப்பதில் உறுதியாக உள்ளது மட்டுமல்ல நமக்கு வேண்டிய தளவாடங்கள், ஆயுதங்கள் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் முதலியவைகளின் உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்றுள்ளோம். அதன் மூலம் பாரதியின் கனவை நாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று கூறலாம்.