பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 99

நாடு விடுதலை பெற வேண்டும் என்று பாரதி பாடுபட்டார். நாட்டு விடுதலைக்காக மக்களைத் திரட்டி ஆவேசமான கவிதைகளை எழுதினார். கட்டுரைகள், கவிதைகள் எழுதினார் பத்திரிகைகள் நடத்தினார், தேசிய காங்கிரஸ் மகாசபைக் கூட்டங்களிலே பங்கு கொண்டார். அக் கூட்டங்களில் தீவிரவாதிகளை ஆதரித்தார். நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்று நம்பிக்கைக் கொண்டிருந்தார். விடுதலை பெற்றதாகவே பள்ளுப்பாட்டைப் பாடினார்.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்பதையும் பாரதி வலியுறுத்தினார். அதனால் தேசத்தைக் காத்தல் செய் என்று நமது குழந்தைகளுக்குப் போதனை செய்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அபாயம் இருவழிகளில் வரக்கூடும். ஒன்று வெளியிலிருந்து வரும் அபாயம் மற்றொன்று உட்பகை. இரு அபாயங்களும் இன்று இருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம்.

அதற்கு நமது நாட்டின் தற்காப்பைப் பலப்படுத்த வேண்டும். ராணுவத்தை முப்படைகளைப் பலப்படுத்த வேண்டும். நமது படைகளுக்குத் தேவையான நவீன ஆயுதங்களில் நாம் முன்னேற வேண்டும். அதில் முழுமையான தன்னிறைவு பெற வேண்டும்.

நமது நாட்டின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டைப் பலப்படுத்த வேண்டும். நமது நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும். விஞ்ஞான தொழில் நுட்பத்தை, உற்பத்தித் திறனைப் பலப்படுத்தி வளர்க்க வேண்டும். நமது நாட்டு மக்களின் தேசிய உணர்வு நிலையை உயர்த்த வேண்டும். நாட்டு மக்களின் தோற்றத்தையும் ஏற்றத்தையும் உயர்த்த வேண்டும். இந்திய நாட்டின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும்.

இதைப் பாரதி தமது பாடல்களில் பல இடங்களிலும் வற்புறுத்திக் கூறியுள்ளார். அதை நாம் மனதில் கொள்ள வெண்டும். தேசத்தைக் காப்பது நமது தலையாய கடமை என்பதை நமது குழந்தைகளை உணரச் செய்ய வேண்டும்.