பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 பாரதியின் புதிய ஆத்திசூடி ואוו

---

40. தையலை உயர்வு செய்

தையல் என்றால் பெண். பெண்களை உயர்வு செய்ய வேண்டியதற்கு பாரதி எப்போதுமே முதலிடம் கொடுத்துள்ளார். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் பழைய கருத்துக்களை எல்லாம் துக்கி வீசியெறிந்து குப்பையில் போட்டு விட்டு 'அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம், கற்பு நிலையென்றால் இருசாராருக்கும் பொதுவாக்குவோம்’ என்று உறுதியாக முதலில் பேசியவன் பாரதியேயாகும். இன்றைய பெண்ணுரிமை இயக்கத்திற்கு பாரதி முன்னோடியாவார்.

பெண் என்றால் தாய், தமக்கை, தங்கை, மனைவி, மகள், மருமகள், பேத்தி எனவே சமுதாயத்தின் சரிபாதி, இதை பாரதி மிக வலுவாக வலியுறுத்திப் பாடியுள்ளார்.

இன்று பாரத நாட்டின் பல பகுதிகளிலும் பெண்கள் அடிமையிலும் அடிமைகளாக இருக்கிறார்கள். அதில் சில மாற்றங்கள் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருந்த போதிலும் இன்னும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பெண்கள் நிலையை உயர்த்த வேண்டும். பெண்கள் படிக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஈடுபட வேண்டும், ஆண்களுக்கு நிகராக அனைத்துப் பணிகளிலும் பெண்கள் உயர வேண்டும். ஆண்களும் பெண்களும் சமமாக நின்று நாடு முன்னேறப் பாடுபட வேண்டும். இது பாரதியின் கருத்தாகும்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’’ என்று விடுதலைப்பாட்டில் பெண்களின் விடுதலையைப் பற்றி பாடத் தொடங்குகிறார்.