பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|UM பாரதியின் புதிய ஆத்திசூடி-9

வழக்குவைத்து நனற நியாயத்தை நிலை நாட்டி, அரசியல் பிழைத்தோரிக்கு அறத்தைக் கூற்றாக்கி மதுரையை எரித்து இறுதியில் முக்தியும் அ ைதாள் என்று அறிகிறோம்.

பntlமேகலை தன்னைக் கண்ணகியின் மகள் எனக் கூறி, தத்துவ ஞானத்தில் முதன்மை பெற்று சமயக்கணக்கர்களுடன் வாதாடி வெற்றி பெற்று தனது அட்சய பாத்திரத்தின் மூலம் உலகின் பசிப்பிணியைப் போக்க முற்படுகிறாள்.

பின்னர் வந்த பக்தி இயக்கம் மீராபாய், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் போன்ற பெண்பால் பக்தர்களைத் தோற்றுவித்து மரியாதை செலுத்திற்று. ஆண்டாள் பக்தியில் சிறந்து கடைசியில் முக்தியும் பெறுகிறாள்.

இவ்வாறு சமுதாய நிலைமையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் அடிப்படையில் சமுதாயத்தில் பெண்களின் பொது நிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆன்னிய ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் பல பெண்களும் பங்கு பெற்று சிறப்படைந்தார்கள். அந்த நேரத்தில் பாரதி பெண் விடுதலைக்குக் குரல் கொடுக்கிறார். புதுமைப் பெண்ணை அழைக்கிறார்.

இன்று பெண்ணுரிமை இயக்கம் புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறது. ஆட்சியில், அதிகாரத்தில் பெண்கள் உரிய இடத்தைப் பெற வேண்டும். தையலை உயர்வு செய்' என்னும் பாரதியின் வாக்கு இன்று மிகவும் அதிகமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

51. தொன்மைக்கு அஞ்சேல்

தொன்மை என்றால் பழமையென்று கூறலாம். மிகவும் நீண்டகாலத்திற்கு முந்தியது என்று கூறலாம். பழைய பழக்க வழக்கங்களைத் தொன்மையானது எனக் கூறலாம். அதில் மூடப்பழக்க வழக்கங்களும் சேரும். அப்படிப்பட்ட காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை நாம் நிராகரிக்க வேண்டும். அஞ்சாமல் அவைகளை நீக்க வேண்டும்.