பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 105

பள்ளத்திலே உள்ள பாசி பழைமையானது. அதை நீக்குவதற்கு பெரு வெள்ளங்கள் தேவைப்படுவதைப் போல, தொன்மையான பல நாற்றங்களையும் நீக்குவதற்கு புதிய கருத்துக்களும் அவசியப்படுகின்றன.

ந ம து சாத்திரங்கள், சங்க இலக்கியங்கள் தொன்மையானவை அவைகளில் சிறந்தவற்றை எடுத்துக் கொள்கிறோம், அல்லனவாயின் அவற்றை மாற்றுகிறோம் அல்லது நீக்குகிறோம்.

சாத்திரம் கோடி வைத்தாள் - அவை தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் மீத்திடும் பொழுதினிலே - நான் வேடிக்கை உறக்கண்டு நகைப்பதற்கே கோத்த பொய் வேதங்களும் - மதக் கொலைகளும், அரசர்தம் கூத்துக்ளும மூத்தவர் பொய் நடையும் - இள மூடர் தம் கவலையும் அவள் புனைந்தாள்’’ என்று பாரதி கண்ணன் பாட்டில் குறிப்பிடுகிறார்.

எனவே தொன்மையான பொய் வேதங்கள், மதக்கொலைகள், அரசர்களின் கூத்துக்கள் மூத்தவர் பொய்நடை ஆகியவற்றை நிராகரிக்க நாம் அஞ்சத் தேவையில்லை. அதேபொழுது தொன்மையானது அனைத்தும் பழைமையானது. காலம் கடந்து போனது. கவைக்கு உதவாதது. என்று கருதத் தேவையில்லை பழைமை என்றதும் பயப்படத் தேவையில்லை.

தொன்மையில் உள்ள நல்லனவற்றை ஏற்பதிலும் சரி, அல்லனவற்றை நீக்குவதிலும் சரி, இரண்டிலும் நாம் அஞ்சத் தேவையில்லை என்பதே தொன்மைக்கு அஞ்சேல் என்பதன் பொருளாகும். 52. தோல்வியிற் கலங்கேல்

நாம் எந்த வேலையைச் செய்தாலும் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது