பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O_அ.சீனிவாசன் 107

அதன்பொருள் நாம் செய்யும் வேலைகளுக்கு எந்தப் பலனையும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதல்ல. வெற்றி தோல்விகள் நமது முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்தே அதன் கருத்தாகும்.

நாம் ஒரு காரியத்தைச் செய்யும் போது ஒரு குறிக்கோளுடன் ஒரு நல்ல நோக்கத்துடன் தான் செய்கிறோம், அந்தப் பணிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தான் விரும்புகிறோம். வெற்றியும் தொல்வியும் பெரும்பாலும் நம் கையில் தான் இருக்கின்றன. போதுமான கவன மில்லாமலும் அக்கறையில்லாமலும், ஊக்கமின்மை காரணமாகவும் கூட வெற்றி தோல் விகள் பாதிக்கப்படக் கூடும். ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சூழ்நிலை காரணமாகவும் நமது சக்திக்கு அப்பாற்பட்ட புற நிலைக் காரணங்களாலும் ஒரு நேரத்தில், ஒரு வேலையில், ஒரு முயற்சியில் தோல்வியும் ஏற்படலாம். அப்போது அந்தத் தோல்வியைக் கொண்டு கலங்காமல் தொடர்ந்து முயற்சி எடுத்து அப்பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். அதற்கு விடாமுயற்சி என்று கூறுகிறோம். அத்தகைய விடாமுயற்சியுடன் தோல்விகளில் கலங்காமல் நமது பணிகளை நமது முயற்சிகளை நமது கடமைகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

53. தவத்தினை நிதம் புரி

தவம் என்றால் இங்கு வாழ்க்கையை முழுமையாகத் துறந்து விட்டு, காட்டிற்குப் போய் உடம்மை ஒடுக்கி கண்களை மூடிக்கொண்டு அமைதியாக அமர்ந்து கொண்டு F வேறெந்த சிந்தனையும் இல்லாமல் தவம் செய்து கொண்டிருப்பது என்பது பொருளல்ல, தவம் என்றால் ே இங்கு முயற்சி, கடும் முயற்சி, விடாமுயற்சி אן அருஞ்செயல் என்று பொருளாகும். கைகேயி, N M இராமனைக் காட்டிற்குச் செல்லுமாற கூறும் போது, ! 2^ ༈ །ས་ நீ போய் தாழ் இரும் சடைகள் தாங்கித் தாங்கரும்.' اااالالا ار தவம் மேற்கொண்டு, பூழி வெம் கானம் நண்ணிப் புண்ணியத்துறைகள் ஆடி, ஏழிரண்டு ஆண்டில் வா’ என்று கூறியதாகக் கம்பன் தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.

  • =

■■ 는