பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)ே அ.சீனிவாசன் 109

முயற்சிகளாகும். தவம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலில்

முனைப்புடன் எது நேரினும் இடர்ப்படாமல் ஒரே குறியாக நின்று

செய்து முடிப்பதாகும்.

மழை, வெயில், புயல், தடைகள், இடையூறுகள் எது

நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல் ஒரே குறியாக இருந்து ஒரு வேலையைச் செய்து முடித்தல் தவமாகும்.

'பொழுது புலாந்தது யாம் செய்த தவத்தால், புன்மையிருட் கணம் போயின் யாவும் ’’

என்று பாதி கூறுகிறார்.

பொழுது புலர்ந்து விட்டது. காலை புலர்ந்து விட்டது. வெளிச்சம் வந்து விட்டது. ஒளி பிறந்து விட்டது. இருள் கணங்களாக இருந்த புன்மைத் துன்பங்கள் இழிவுகள் கேடுகள் ஆகாதனவெல்லாம் போய் விட்டன. இவையெல்லாம் நமது கடும் முயற்சியால் கடும் தவத்தால் நிகழ்ந்து இருக்கின்றன என பாரதி குறிப்பிடுகிறார்.

'நீலத்திரை கடல் ஒரத்திலே - நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை’

என்று பாரதி குறிப்பிடுகிறார்.

நமது நாட்டின் தெற்கு எல்லை குமரிமுனை. அங்கு முக்கடல்களும் வந்து மோதுகின்றன, முன்பு அதன் தெற்கே இருந்த தமிழ்ப் பகுதியைக் கடல் கொண்டு விட்டது என்று பழைய இலக்கியங்களும் புவியியல் வரலாறும் கூறுகின்றன. மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டு விடாமல் குமரித்தெய்வம் தமிழ்த் தாய் தவம் இருப்பதாக நமது நாட்டுக் கவிஞர்களின் வழியில் பாரதியும் அதைக் குறிப்பிடுகிறார்.

கடல் அலைகளைக் கட்டுப்படுத்திக் கடல் அரிப்பைத் தடுக்க முயற்சிப்பது கடும் தவமாகும். அதே போல நமக்கும் நமது நாட்டிற்கும் ஆக வேண்டிய பணிகளை தொடர்ச்சியான முனைப்புடன் கடும் முயறசியுடன் நமது அன்றாடப்பணிகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். அதனையே தவத்தினை நிதம் புரி என்று குறிப்பிட்டுக் கூறுகிறார்.