பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

54. நன்று கருது

நல்லதையே நாம் நினைக்க வேண்டும். நல்லதையே நாம்

செய்ய வேண்டும். நன்றே செய், அதை இன்றே செய், அதை

இப்போதே செய் எனபதை நாம் மறந்து விடக் கூடாது.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தால் பின்நமக்கேது வேண்டும்”

என்று பாரதி கூறுகிறார்.

ஒற்றுமை அவசியம், இந்த நல்ல காரியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அறிவு வந்தால் போதும் நாம் எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என்று பாரதி கூறுகிறார்.

'எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும் திண்னிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த நல்லறிவு வேண்டும்’

என்பது பாரதி வாக்கு.

வெறும் நல்லெண்ணத்தினால் மட்டும், பாரதி இதைக் கூறவில்லை. நமது கடமையாக நல்லதையே கருத வேண்டும் என்று கூறுகிறார். அதை நாம் வழிகாட்டியாகக் கொண்டு நமது வாழ்க்கையிலும் கடைப்பிடிப்போமாக.

55. நாளெல்லாம் வினை செய்

வினையென்றால் வேலை, தொழில், செயல், என்று பொருளாகும் இடைவிடாமல் நாளெல்லாம் பொழுதெல்லாம் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். தொழில் செய்து கொண்டிருக்க வேண்டும். செயல்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். விழிப்புடன் வேலை செய்து கொண்டேயிருக்க வேண்டும்.