பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ெஅ.சீனிவாசன் 111

வயல்களில், தோட்டங்களில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், வீட்டில் உள்ள வேலைகளைச் செய்கிறோம். அது மட்டும் வேலைகளல்ல, காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்தல், குளித்தல், உடுத்தல், உண்ணுதல் போதல் வருதல் நடத்தல், குழந்தைகள் மற்றும் உற்றாருடன் களித்தல், படித்தல், படம் பார்த்தல், உறங்குதல் அனைத்தும் தொழில்களேயாகும், படிக்கும் மாணவ மாணவிகள், படிப்பது பள்ளியில் கல்லூரியில் மட்டுமல்ல வீட்டில் நூலகங்களில் படித்தல் ஆய்வுநேரங்களில் உரையாடுதல் ஆகியவைகளும் படித்தலேயாகும். படிப்பதற்கு காலமும் வயது வரம்பு கிடையாது. இவ்வாறு மனிதன் நாளெல்லாம் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

உலகம் இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. உலகில் உள்ள அத்தனை பொருள்களும் சதா இயங்கிக் கொண்டே இருக்கின்றன. பூமி இடைவிடாமல் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. ஆற்று நீர் ஒடிக் கொண்டே இருக்கிறது. நாம் இடைவிடாது செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சோம்பல் கூடாது. நேரத்தை வீணாக்கலாகாது. வெட்டிப்பொழுது பேக்கக்கூடாது. பயனுள்ள பணிகளைச் செய்து கொண்டிருக்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். கோடி வகைத் தொழில்கள் நாடும் படிக்கும் நாள்தோறும் வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்கச் செய்ய வேண்டும் என்று பாரதி நம்மை வேண்டுகிறார்.

58. நினைப்பது முடியும்

நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு நாம் திட்டமிட்டுத் தீர்மானித்துப் பணியாற்ற வேண்டும். நினைப்பது முடியும் என்பது ஆரூடம் அல்ல. மூடநம்பிக்கையும் அல்ல. ஒரு செயலில் ஈடுபடும் போது அதைப்பற்றி முன்கூட்டி சிந்தித்து ஆலோசனை செய்து அந்த வேலையைத் தொடங்குகிறோம். அந்த வேலையை முடித்து விட வேண்டும் என்னும் நம்பிக்கையுடன் நாம் அதைச் செய்கிறோம். அந்த