பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பாரதியின் புதிய ஆத்திசூடி O

முயற்சியில் வெற்றி பெறுகிறோம். நாம் எடுத்த காரியம் முடிகிறது. 'எண்ணிய முடிதல் வேண்டும்’ என்பது பாரதி வாக்காகும்.

57. நீதிநூல் பயில்

நமது நாட்டில் எண்ணற்ற நீதி நூல்கள் உள்ளன. அவை நமது நாட்டில் உள்ள எல்லா மொழிகளிலும் உள்ளன. நமது நாட்டில் தொன்மையாக உள்ள வேதங்கள் உபநிடதங்கள் புராணங்கள், இதிகாசங்கள், பல்வேறு நாட்டுப் பாடல்கள், முதலிய பலவும் நீதி கலந்து நூல்களேயாகும்.

நீதி என்பதில் பொது நீதி அரச நீதி, பொருள் நீதி, சமுதாய நீதி, முதலியவைகளும் அடங்கும், மனு நீதி நூல் சமண நீதி நூல்கள் முதலியனவும். தமிழில் சங்க நூல்கள், அக நூல்கள், புற நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள், கீழ் கணக்கு மேல் கணக்கு நூல்கள், குறிப்பாக திருக்குறள் முதலிய நீதி நூல்கள் கம்பராமாயணம், வில்லிபாரதம், ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்கள் திருமந்திரம், தாயுமானவர், அருணகிரியார் வள்ளலார், பாரதியார் போன்றோர்களின் நூல்கள் முதலியனவெல்லாம் நீதியும்

நீதிகலந்த நூல்களுமாகும்.

இந்த நூல்களையெல்லாம் நாம் படிக்க வேண்டும். படித்துப் பயிற்சி பெற வேண்டும். அவைகளில் உள்ள நல்ல கருத்துக்ளை எல்லாம் கிரகித்துக் கொள்ள வேண்டும். அல்லனவற்றை ஒதுக்கிட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நூல்களில் உள்ள நல்ல கருத்துக்கள், தொன்மை, பொருள் மொழிச்சுவை காவியச்சுவை கருதியும் அவைகளை நன்கு பயில வேண்டும்.

58. நுணியளவு செல்

நாம் எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். அரைகுறையாக விட்டுவிடக்கூடாது. நுணியளவு செல் என்றால் கடைசி வரை சென்று பார்க்க வேண்டும் என்பதாகும். உச்சிவரை சென்று பார்க்க வேண்டும் என்பதாகும்.